நாட்டின் முதலாவது முழுமையான டிஜிட்டல் மாநிலமாக கேரளா மாற உள்ளது. கேரள ஐடி துறையும், மாநில ஐடி பூங்காக்களும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. குடியுரிமை, வாழ்க்கை முறை, வணிகம் என மூன்று துறைகளாகப் பிரித்து முழுமையான டிஜிட்டல் மாநிலமாக கேரளம் அடியெடுத்து வைக்க உள்ளது. இது ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக கருதப்படுகிறது. டிஜிட்டல் குடியுரிமை முதல்கட்டமாக அமலாக்கப்பட உள்ளது. இதில் சான்றிதழ்கள், அரசு சேவைகள், கட்டணங்கள், நில வரைபடங்கள் போன்றவற்றை டிஜிட்டல் மயமாக்குவது டிஜிட்டல் குடியுரிமையாகும். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுகின்றன. குடும்ப அட்டை, ஆதார் போன்றவை ஆன்லைன் ஆக்கப்பட்டதோடு டிஜிட்டல் குடியுரிமை ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளது.முதல் டிஜிட்டல் மாநிலமான கேரளத்தை முழுமையான டிஜிட்டல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது ஐடி கொள்கையின் முக்கிய நோக்கமாகும். குடிமகன் அனைத்து வாழ்க்கை தேவைகளுக்கும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போதுதான் சமூகம் முழுமையான டிஜிட்டல் மயமான தாக கருதமுடியும். டிஜிட்டல் மாநில நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உயர்மட்ட ஐடி குழுவுக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வாழ்க்கை முறையும், டிஜிட்டல் வணிகமும் நடைமுறைப்படுத்த தாமதமாகும். டிஜிட்டல் எழுத்தறிவுக்கு தொழில்நுட்ப நடவடிக்கையை முழுமையாக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். டிஜிட்டல் வணிகத்துக்கு தேவையான இணைய தளங்களும், ஆப்புகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் டிஜிட்டல் அடிப்படையிலான வசதிகளும், உடல் அடையாள அடிப்படை யிலான வளர்ச்சிகளும் ஒரேமாதிரியாக முன்னெடுக்கப்படுவதாக ஐடி பூங்காக்களின் சிஇஓ ரிஷிகேஷநாயர் தெரிவித்துள்ளார். மாநில அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகளை அறிந்துள்ள பல்வேறு பெரிய சர்வதேச ஐடி நிறுவனங்கள் கேரளத்திற்கு வருகின்றன. உடல் அடையாள பின்னணியிலான வளர்ச்சிக்கு மூன்றாண்டு களுக்குள் புதிதாக ஒருகோடி சதுரஅடி ஐடி கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 52 லட்சம் சதுரஅடியிலான கட்டு மானம் நிறைவடைந்துள்ளது. ஒருகோடி சதுரஅடி கட்டடப்பணி நிறைவடையும்போது லட்சத்துக்கு மேலான புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

BSNL Employees Union Nagercoil