2016-ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், இந்தியாவின் வளர்ச்சி சுமார் 2 சதவிகிதம் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த தேசியபொருளாதார ஆராய்ச்சி அமைப்பு இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் கேபிரியேல் ஜோட்ரோவ்ரிச், கீதா கோபிநாத், மும்பை குளோபல் மேக்ரோ ரிசர்ச் அமைப்பின் மேலாண்மை இயக்குநர் பிராச்சி மிஸ்ரா, ரிசர்வ் வங்கி அதிகாரி அபினவ் நாராயணன் ஆகியோர் ஆய்வில் இடம்பெற்றனர். அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதில், “2016 நவம்பரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்கத் திட்டம், அன்றைய கால கட்டத்தில் சுமார் 2 சதவிகிதவளர்ச்சியை பாதித்தது. பண மதிப்பு நீக்கம்அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதமும், டிசம்பர்மாதமும் 3 சதவிகிதம் வரை பாதிப்பு இருந்தது. 2017 கோடைக் காலத்தில் பொருளாதார ரீதியாக இந்தியா மோசமான நிலையில் இருந்தது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆய்வை நடத்தியவர்களில் கீதா கோபிநாத், பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமை பொருளாதார நிபுணராக தேர்வுசெய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது

BSNL Employees Union Nagercoil