ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சுனாமி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பெரிய சுனாமி அந்த தீவை தாக்கி உள்ளது. இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இந்த சுனாமி தாக்கி உள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சரியாக எங்கே

ஜாவா தீவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் இந்த சுனாமி உருவாக்கி உள்ளது. இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது. இது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஆகும்.

என்ன காரணம்

ஜாவா தீவிற்கு அருகில் இருக்கும் கரகட்டாவ் எரிமலை வெடித்த காரணத்தால் இந்த சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. இந்த எரிமலை வெடித்த 10 நிமிடத்தில் சுனாமி ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட நில அடுக்கு நகர்வு காரணமாக சுனாமி உருவாகி இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.