மாஸ்கோ, டிச.28 -ரஷ்யாவில் பெரும்பாலான மக்கள் மீண்டும் முந்தைய சோசலிச சோவியத் அமைப்பு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். அதாவது, 66 சதவீத மக்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். சோசலிச சோவியத் அமைப்பைக் கலைத்துவிட்டது குறித்துத் தாங்கள் கவலைப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ‘லாவதா சென்டர்’ என்றசுயேச்சையான அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி புடின் அரசு தொழிலாளர்களுக்கு எதிரான ஆட்சியே நடத்துகிறது. இந்த அரசு வறுமையில் வாடும் மக்களை மேலும் அதிக வறுமையில்தான் தள்ளுகிறது. முதலாளிகளை மேலும்மேலும் வளர்க்கிறது.

தொழிலாளர் களின் குடும்ப வருமானம் குறைந்து கொண்டே போகிறது என்றும் அந்த ஆய்வில் மக்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர். சோவியத்நாடு பெற்ற சமூக சாதனைகளெல்லாம் இப்போது இல்லை என்று அதிருப்தி தெரி விக்கின்றனர். 1991 டிசம்பர் 25-இல்தான் சோவியத்நாடு என்ற சோசலிச அமைப்பைக் கலைத்துவிட்டதாக அன்றைய ஜனாதிபதி கோர்ப்பசேவ் அறிவித்தார். ரஷ்ய மக்களிடம் கடந்த ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வில் சோவியத் அமைப்பைக் கலைத்துவிட்டதை எதிர்த்து 58 சதவீதம் மக்கள் கருத்துத் தெரிவித்திருந்த னர். இவ்வாண்டு தற்போதைய கரு த்துக் கணிப்பில் அது 66 சதவீதமாக அதிகரித்துள்ளது

BSNL Employees Union Nagercoil