டேவிட் லிப்டனின் கருத்துக்களில் நாம் மாறுபடலாம். ஐ.எம்.எப் அணுகுமுறையிலும் மாறுபடலாம். ஆனால் டேவிட் லிப்டன் தரும் தகவல்கள் முக்கியமானவை. அதிர்ச்சிகரமானவை.

.இது “கார்டியன் ” இதழில் (11.12.2018) வெளியாகியுள்ள செய்தி. உலக நிதி வானில் கருமேகங்கள் சூழ்கின்றன; ஆனால் இன்னொருபேய் மழைக்கு நிதி உலகம் தயார் நிலையில் இல்லை என ஐ.எம்.எப் எச்சரிக்கை செய்துள்ளதுஎன்பதே அதன் சாரம்.ஐ.எம்.எப் (சர்வதேச நிதியம்) நிறுவனத்தின்முதன்மை துணை மேலாண்மை இயக்குநர் டேவிட் லிப்டன் வார்த்தைகளில் “ நெருக்கடிதடுப்பு நடவடிக்கைகள் முழுமையடைவில்லை”. உலக நிதி நெருக்கடி ஏற்பட்டு பத்தாண்டுகள் கழிந்த பின்னரும் அதற்கான தீர்வுகளை உலகவங்கி முறைமை உருவாக்கவில்லை.“வெயில் அடிக்கும் போது கூரை போட வேண்டும்; ஆனால் காலம் தவறியிருக்கிறது. மேகங்கள் சூழ்கின்றன. நெருக்கடி தடுப்பு பணிகள் பாதியில் நிற்கும் போது பெருமழை பெய்தால் என்ன ஆகும்.” என்று கேட்கிற டேவிட் லிப்டனின் வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.

என்ன தயார் நிலை?

இப்படியொரு நெருக்கடி சூளும் காலங்களில் அமெரிக்க மைய வங்கியான “பெடரல் ரிசர்வ் ” அல்லது மற்ற நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்து பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க முயற்சிப்பதே வழக்கம். ஆனால் இன்னொரு ‘ பெரு வீழ்ச்சி’ஏற்பட்டால் இத்தகைய வழிமுறைகள் பயனளிக்காது என்று டேவிட் லிப்டன் எச்சரித்துள்ளார்.இதற்கு காரணம், அரசாங்கங்களின் உச்சபட்ச கடன்களே ஆகும். இக்கடன்கள் காரணமாகவரிக்குறைப்புகளும், செலவின அதிகரிப்புகளும் சாத்தியமற்றதாகி இருக்கிறது. ஐ.எம்.எப் கடந்த நிதி நெருக்கடியின் போது பற்றாக்குறைக்குள் வீழ்ந்தது. உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து 1 டிரில்லியன் டாலரை (தற்போதைய ரூபாய் மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி) போர்க்கால நிதியாகஅளித்தன. அப்போது எல்லா உலக தலைவர்களும் ஐ.எம்.எப் நிறுவனத்தின் நிதிவலிமையை உறுதிப்படுத்த ஒப்புக் கொண்டனர். “உலக நிதி நெருக்கடியின் பாடம், ஐ.எம்.எப் நிறுவனமே பற்றாக்குறையில் வீழ்ந்ததுதான். இப்படியொரு நிலைமை இனி ஏற்படக்கூடாது”. என்பதே அப்போதைய கருத்தொற்றுமை.

அமெரிக்க – சீனா வர்த்தகப் போர்

உலக அரங்கில் மிகக் கவலையோடு இவ்வர்த்தகப் போர் விவாதிக்கப்பட்டு வருகிறது. 2001-இல் உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்த போது அதன் பொருளாதாரம் “ஒரு டிரில்லியனாக” இருந்தது. அப்போது அதன்வர்த்தகக் கொள்கைகள் இசைந்ததாக இருந்தது.ஆனால் தற்போது “16 டிரில்லியன்” பொருளாதார வல்லமை பெற்ற சக்தியாக சீனா உருவெடுத்துள்ளது. ஆகவே சீனாவின் வர்த்தகக் கொள்கைகள் மாற்றத்திற்கு ஆளாக வேண்டுமென்று டேவிட் லிப்டன் கூறுகிறார்.ஆனாலும் அமெரிக்காவின் அதீத நிர்ப்பந்தத்தை லிப்டன் ஏற்கவில்லை. சீனாவின்கருத்தையும் கணக்கிற்கொள்ள வேண்டுமென்பதே அவரது தொனியாக உள்ளது. இதோ லிப்டன் வார்த்தைகளில்.“சீனா செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் உள்ளன. அச்சீர்திருத்தங்கள் அந்நாட்டின் சொந்த நலனுக்கும், உலக நாடுகளின் நலனுக்கும் பயன்படலாம். ஆனால் தற்போது அந்நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாதுஎன சீனா கருதுகிறது. வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து நிர்ப்பந்திப்பதை அது ஏற்கவில்லை ” என்று கூறுகிறார்.டேவிட் லிப்டன் கருத்துக்களோடு நாம் உடன்படுவது, மாறுபடுவது இங்கு விவாதிக்கப்படவில்லை. உலக நெருக்கடி முற்றுகிற பல்வேறு புள்ளிகளை அடையாளம் காண்பதற்கு டேவிட் லிப்டனின் கருத்துக்கள் உதவக் கூடும்.

லண்டன் கண்ட பேரதிர்ச்சி…

வர்த்தகப் போர்கள் உலக வளர்ச்சியை மேலும் மந்தமாக்கி உள்ளது. நிதிச் சந்தைகளும் அண்மை வாரங்களில் பெரும் பீதியை வெளிப்படுத்துகின்றன. டிசம்பர் முதல் வாரத்தில் லண்டனின் பங்குச் சந்தையின் குறியீடான எஃப்.டி.எஸ்.இ 100 (FTSC- 100)பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. டிசம்பர் 6 அன்று ஒரே நாளில் லண்டன் பெரு நிறுவனங்கள்56 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5 லட்சம் கோடிகள் வீழ்ச்சியை அது எதிர்கொண்டது.குறைவான வட்டி விகிதங்களைக் கொண்ட கடந்த பத்தாண்டில் உலகக் கடனின் மொத்த மதிப்பு – அரசு மற்றும் தனியார்களின் – 60 சதவீதம் உயர்ந்து 182 டிரில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது. 127.40 கோடியே கோடி ரூபாய் என்றால் கற்பனை செய்ய முடிகிறதா?டேவிட் லிப்டனின் கருத்துக்களில் நாம் மாறுபடலாம். ஐ.எம்.எப் அணுகுமுறையிலும் மாறுபடலாம். ஆனால் டேவிட் லிப்டன் தரும் தகவல்கள் முக்கியமானவை. அதிர்ச்சிகரமானவை.இன்னொரு பேய் மழை காத்திருக்கிறது! இனியாவது சரியான தீர்வுகள் நோக்கி உலகம்நகருமா?

க.சுவாமிநாதன் ஐ.எம்.எப் அறிக்கை :
ஐ.எம்.எப் அறிக்கை : காத்திருக்கிறது இன்னொரு பேய் மழை


BSNL Employees Union Nagercoil