ஆலப்புழா, ஜன.5-

‘‘எனக்கு வயது 101 ஆகிறது. ரொம்பநேரம் நிற்பதற்கு என்னால் முடியாது. ஆனாலும் நான் வருவேன்’’ என்று சொன்னவர் கேரளத்தின் முன்னாள் அமைச்சரும், மரியாதைக்குரிய தலைவருமான கே.ஆர்.கௌரியம்மா. வனிதா மதிலில் பங்கேற்பதற்காகத் தம்மை அழைக்க வீட்டுக்கு வந்த அமைச்சர் சுதாகரனிடம் சொன்ன வார்த்தைகள் இவை. வனிதா மதிலில் ஜே.எஸ்.எஸ். கட்சியின் பொதுச்செயலாளர் கே.ஆர்.கௌரியம்மாவின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக அவரை நேரடியாக வந்து அழைத்தார்அமைச்சர். ‘‘பெண்களின் உரிமைக்காகநடத்தப்படும் வனிதா மதில் காலத்தின் கட்டாயம்’’ என்றார் கௌரியம்மா.இடது ஜனநாயக முன்னணி விரிவாக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ‘‘இப்போது அதுவா விஷயம்? இப்போதைய விஷயம் வனிதா மதில் அல்லவா?’’ என்றார் கௌரியம்மா. இடது ஜனநாயக முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு ‘‘ஒன்றுபட்டுப் போகவில்லையென்றால் வனிதா மதிலில் நான் கைகோர்க்க முடியுமா?’’ என்றுபதில் கேள்வி போட்டார் கௌரியம்மா.

BSNL Employees Union Nagercoil