அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் திருநாள் பொங்கல் திருநாள். உழைப்பிற்கு உதவிய
இயற்கையைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா பொங்கல் திருநாள்.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் தேவை. . உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. உணவை உற்பத்தி செய்யும் உழவன் உணவு இன்றி தவித்த நிலையை நாம் கஜா புயலில் கண்டோம்.

உழவன் ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும். என்ற கூற்றுக்கு இணங்க வரும் கால்ங்கள் உழவன் உயரத்தில் இருக்கும் நிலை வரவேண்டும் . உழைக்கும் மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் வரவேண்டும்.

அனைவருக்கும் BSNL ஊழியர் சங்கத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்