நிலாவில் பயிர்களை வளர்க்கும் ஆய்வை சீன விண்கலம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய சேஞ்ச் -4 விண்கலம், தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. விண்கலத்தில் இருந்து நிலவின் தரை யில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும், யாடு கலமும் தனியே ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதனிடையே சேஞ்ச்-4 விண்கலத்துடன் சீனா அனுப்பியபருத்தி விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர். நிலவின் தட்டவெப்ப சூழலில் , பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழல் இருப்பது மெல்ல உறுதியாகி வருவதாக சீன விஞ்ஞானி கள் கூறியுள்ளனர்.இதே போன்று உருளைக் கிழங்கு உள்ளிட்ட சில பயிர் களின் விதைகளையும் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வை உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

BSNL Employees Union Nagercoil