16.01.2019 அன்று AUAB கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களுக்கு, 17.01.2019 அன்று AUAB கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதில், மூன்றாவது ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என AUAB எச்சரித்துள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்குவது, BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது , ஓய்வூதிய மாற்றத்தை திருத்தம் செய்வது , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பின் மீது அரசு விதிகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் 2வது ஊதியமாற்றத்தில் விடுபட்ட பிரச்சினைகளை தீர்ப்பது ஆகிய கோரிக்கைகளை தீர்வு காணப்படும் என வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீது, பயனுள்ள நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என AUAB வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது.

தொடர் நடவடிக்கைக்குழுவிற்கு (INSTITUTIONAL MECHANISM) தொலைத்தொடர்பு இலாகாவின் கூடுதல் செயலர் தான் தலைமை வகிக்க வேண்டும் என்ற AUAB கோரிக்கை ஏற்கப்படாமல், இணைச்செயலர்(நிர்வாகம்) அவர்களது தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 10.01.2019 அன்று கூடிய பொழுது AUAB கணிப்பு சரி என உணரப்பட்டது. குழுவில் தொலைத்தொடர்பு இலாகா சார்பு தரப்பு கோரிக்கைகளின் தற்போதை நிலைமை குறித்த தகவல்கள் எதையும் வழங்கமுடியாமல் தவித்தது.

கோரிக்கைகளை தீர்ப்பதில் தொலைத்தொடர்பு இலாகாவிற்கு ஆர்வமில்லை, காலத்தை கடத்துவதிலேயே DoT கவனமாக இருக்கிறது. அமைச்சரின் வேண்டு கோளுக்கிணங்க ஒத்தி வைக்கப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் துவக்கிடும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் AUAB அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil