நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் அமலாக்க துவங்கிய 1991ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ள 18 பொது வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்றுள்ள பெருமை தொலை தொடர்பில் நமக்கு மட்டுமே சொந்தமானதாகும். போபால் அகில இந்திய மாநாட்டிற்கு பின் ATIEU CL.III என்ற பெயரில் பங்கேற்றோம். அதற்கு பின்னர் AITEU CL.III (NAMBOODIRI) என்ற பெயரில் பங்கேற்றோம். 2001க்கு பின்னர் BSNL ஊழியர் சங்கம் என்ற பெயரில் பங்கேற்று வருகிறோம். இந்த 18 பொது வேலை நிறுத்தங்களில் பங்கேற்றதாலும், அதற்கான பிரச்சாரங்களை வலுவாக நடத்தியதாலுமே, நமது சங்கம் அமைப்பு ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் வலுவானதாக உள்ளது. எனவே பொது வேலை நிறுத்தங்களில் நாம் ஊழியர்களை திரட்டுவது என்பது, நமக்கு மிக முக்கியமானது. 
2019, ஜனவரி 8 & 9 ஆகிய தேதிகளில் இந்த 18வது பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. NFTE, BSNL MS மற்றும் TEPU ஆகிய சங்கங்களோடு இணைந்து BSNL ஊழியர் சங்கம் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறைகூவலை விடுத்தது. நமது பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்துக் கொள்ள வேலை நிறுத்தத்திற்கு பின் அதனை பரிசீலிப்பது என்பது அவசியம். வேலை நிறுத்தத்திற்கு பின் உடனடியாக வேலை நிறுத்த விவரங்களை அனுப்ப வேண்டும் என மாநில சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக் கொண்டது. (தமிழகம் உள்ளிட்ட) ஒரு சில மாநிலங்கள் மட்டுமே அந்த விவரங்களை அனுப்பியுள்ளது. இந்த பிரச்சனை 12.01.2019 மற்றும் 19.01.2019 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற மத்திய செயலக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலை நிறுத்த விவரங்கள் வராத காரணத்தால், ஒரு அர்த்தமுள்ள பரிசீலனையை மத்திய செயலகத்தால் நடத்த இயலவில்லை. எனவே, மேலும் காலதாமதமின்றி அந்த விவரங்களை மாநில சங்கங்கள் அனுப்ப வேண்டும் என 19.01.2019 அன்று நடைபெற்ற மத்திய செயலகக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 
அந்த முடிவின் அடிப்படையில், மாவட்டங்களில் நடைபெற்ற வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டங்கள், இதர பிரச்சார வடிவங்கள், சுற்றறிக்கை மற்றும் சுவரொட்டிகளின் எண்ணிக்கைகள், மாவட்டங்களில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கை, அதில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்/விடுப்பு/பணிக்கு சென்றவர்கள் எண்ணிக்கை, BSNL ஊழியர் சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை, அதில் வேலை நிறுத்தங்களில் பங்கேற்றவர்கள்/விடுப்பு/பணிக்கு சென்றவர்கள் எண்ணிக்கை மற்றும் இதர விவரங்களை மாவட்டங்களில் இருந்து பெற்று, அதனை தொகுத்து எழுத்து பூர்வமான அறிக்கையினை 28.01.2019க்கு முன்னர் மாநில சங்கங்கள் அனுப்பிட வேண்டுமென மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. நமது மத்திய சங்கம் கேட்டுக் கொண்ட விஷயங்களை உடனடியாக மாவட்ட சங்கங்கள் 25.01.2019ஆம் தேதிக்கு முன் மாநில சங்கத்திற்கு [email protected] அல்லது [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

BSNL Employees Union Nagercoil