மத்திய தொலை தொடர்பு அமைச்சரிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 03.12.2018 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை AUAB ஒத்தி வைத்தது. அதன்பின் கோரிக்கைகளின் மீது கூடுதல் செயலாளர் DOT, இணைச் செயலாளர் DOT மற்றும் CMD BSNL ஆகியோரிடம் AUAB தொடர்ச்சியாக விவாதித்தது. 4G அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை வழங்குவது ஆகிய பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரச்சனைகளும் BSNLன் புத்தாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றும். பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ள டிஜிட்டல் கமிஷன் (பழைய டெலிகாம் கமிஷன்) கூட்டத்தில் 4G அலைக்கற்றை பிரச்சனை விவாதிக்கப்படும் என்றும், அதற்கு பின் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு செல்லும் என்றும் DOTயின் கூடுதல் செயலாளர் உறுதி அளித்தார். வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு பிரச்சனையில் நிதி அமைச்சகத்துடன் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அதன் தீர்வு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஓய்வூதிய மாற்றம் என்பது ஊதிய மாற்றத்தில் இருந்து தனியாக பிரித்து பார்க்கப்படும் என மத்திய அமைச்சர் கூறிய பின்னரும், DOTயிலிருக்கும் அதிகாரிகள் அதன் தீர்விற்கு தடையாக உள்ளனர். 3வது ஊதிய மாற்ற பிரச்சனையில், DOTயின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், தீர்வு என்பது வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது. AUAB மற்றும் DOTயின் கூடுதல் செயலாளருக்கு இடையேயான மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டத்திற்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக AUAB முடிவெடுக்கும். வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. எனவே ஒரு குறுகிய கால இடைவெளியில் வேலை நிறுத்தத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என மத்திய சங்கம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. 

BSNL Employees Union Nagercoil