சென்னை தொலைபேசியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கேசுவல், காண்ட்ராக்ட் தொழிலாளர் சம்மேளனத்தின் 3வது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.தொலைபேசி நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆட்குறைப்பு செய் வதை உடனே நிறுத்தவேண்டும், இஎஸ்ஐ, இபிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகள், உரிமைகள் முழுமையாக வழங்கப்படவேண்டும், கேசுவல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னை தொலைபேசியின் 3 வது மாநில மாநாடு உயர் நீதிமன்றம் அருகில் நடைபெற்றது.சங்க நிர்வாகி டி.காசி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.அண்ணாமலை தலைமை தாங்கினார். அகில இந்திய உதவி பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா துவக்கி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் அனிமேஷ் மித்ரா சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல்இயூ மாநிலச் செயலாளர் எம்.கன்னியப்பன், பொறியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. ஆறுமுகம், ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.எஸ்.நரசிம்மன், புனிதா உதயகுமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.