அரசுப் பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் சஞ்சார் நிகாம்லிமிடெட்’ எனப்படும் பிஎஸ்என்எல்நிறுவனத்தை, ஒழித்துக் கட்டும் வேலையில் மத்திய அரசு நீண்டகாலமாகவே ஈடுபட்டு வருகிறது. எனினும் அந்த தடைகளையும் மீறி,பிஎஸ்என்எல் ஊழியர்களின் உழைப்பால், அந்த நிறுவனம் நிலைத்து நிற்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் வணிகரீதியான சேவை வந்த பிறகு, தனியார் டெலிகாம் நிறுவனங்களே திணறிக் கொண்டிருக்கின்றன. ஏர்டெல்நிறுவனமே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. சிறிய நிறுவனங்கள் பல தொழிலை விட்டே ஓடி விட்டன. ஆனால், ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கத்தையும் மீறி, முன்புகடனில் இருந்துவந்த பிஎஸ்என்எல்தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது.டிராய் வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த 2018 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் பிஎஸ்என்எல் 1,284.12 கோடி ரூபாயும், ஜியோ8,271 கோடி ரூபாயும், வோடாஃபோன் ஐடியா 7,528 கோடி ரூபாயும்,பார்தி ஏர்டெல் 6,720 கோடி ரூபாயும்வருவாய் ஈட்டியுள்ளன.இந்நிலையில்தான், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செலவுக் குறைப்பு என்ற பெயரில், ஊழியர்களுக்கு வழங்கி வந்த விடுமுறை பயணப்படி, மருத்துவச் செலவுகள் போன்றவை நிறுத்தப் பட்டன.இதன் அடுத்தகட்டமாக, 35 ஆயிரம் ஊழியர்களை விருப்பு ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பவும் மோடி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய்நிதி ஒதுக்கவும் முடிவு செய்துள் ளது.ரிலையன்ஸ் ஜியோ போன்றவற்றின் தாக்குதல்களை சமாளிக்க வேண்டுமானால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும்; 35 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றினால் மட்டுமே எதிர்பார்த்த அளவு செலவுகளைக் குறைக்க முடியும்; நிறுவனத்தையும் தொடர்ந்து லாபத்தில்இயக்க முடியும் என்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் நிறுவனம்’ ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் 1 லட் சத்து 74 ஆயிரம் ஊழியர்களில், 35 ஆயிரம் பேர்களை வெளியேற்றியே ஆக வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கூறியிருப்பதாக தெரிகிறது.தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர்; ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதைக் காட்டிலும் அதிகமாக, 5 மடங்கு ஊழியர்கள் உள்ளனர்; இதனால் செலவுகள் அதிகமாகின்றன; அவர் களில் முதற்கட்டமாக 35 ஆயிரம் பேரை வெளியேற்றுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 ஆயிரம் வரைமிச்சமாகும் என்றெல்லாம் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள் ளது.மேலும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் நிறுவனம், தனது அறிக்கையை இன் னும் தாக்கல் செய்யவில்லை என்றாலும், அறிக்கை வருவதற்கு முன்பாகவே பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீவத்சவாவும் அதனை ஒப்புக் கொண்டுள்ளார். “நாங்களாக வெளியேற்றாமல், ஊழியர் களையே விருப்ப ஓய்வு பெறச் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று அவர் தெரிவித் துள்ளார்.