பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்றுவதற்காகவும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு(ஏயுஏபி) விடுத்த அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம், நாடு முழு வதும் பிரம்மாண்டமான வெற்றியுடன் துவங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள ஊழியர்களில் 90சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 95சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் சேவை மையங் களும், தொலைபேசி நிலையங்களும்,அலுவலகங்களூம் மூடப்பட்டுள்ளன. மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், முக்கியமான நகரங்களிலும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்களும், காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட வீரர்களுக்குஅஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் ‘எஸ்மா’ பிரயோகம்என்கிற தாக்குதலை புறந்தள்ளி விட்டு இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும், இதற்கான ஆயத்த பணி களில் ஈடுபட்ட தலைவர்களுக்கும், ஆதரவு நல்கிய தோழமை சங்க நிர்வாகி களுக்கும் கூட்டமைப்பின் தமிழ் மாநிலதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள் ளனர்.