சென்னை, பிப். 20 –

நிர்வாகத்தின் மிரட்டல் நடவடிக்கைகளையும் மீறி பிஎஸ்என்எல் ஊழியர்களும், அதிகாரிகளும் 3வது நாளாக புதனன்றும் (பிப். 20) வேலைநிறுத்தம் செய்தனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், கடன் வாங்க அனுமதிப்பதோடு, நிறுவனத்தின் சொத்துக்களை பெயர் மாற்றித் தர வேண்டும், 15 விழுக்காடு ஊதிய உயர்வு பலன்களுடன் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளும், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பிப். 18 அன்று வேலை நிறுத்தம் தொடங்கியது.போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது மாநில அரசுகள் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி ஊழியர்களை அச்சுறுத்தியது. அதனையும் மீறி வேலை நிறுத்தத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

ஒழுங்கு நடவடிக்கை…

இரண்டாம் நாள் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது. வாடிக்கையாளர் சேவை மையங்கள் முற்றாக மூடப்பட்டது. வங்கி ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப் பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மத்திய அரசு ஊழியர் ஒழுங்கு நடத்தை அடிப்படை விதிகள் – 17(ஏ) பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்க நிர்வாகம் உத்தரவிட்டது. நோட்டீஸ் வழங்க ஊழியர்கள் இல்லாததால் வட்ட தலைமை பொது மேலாளர்களால் அந்த உத்தரவை செயல்படுத்த முடியவில்லை.3வது நாளும் அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு ஊழியர்கள் வாசலில் அமர்ந்து தர்ணா செய்தனர். தலைமை உயர் அதிகாரிகள் மட்டும் அலுவலகத்திற்கு சென்று தனிமையில் அமர்ந்திருந்தனர்.இதனையொட்டி பிஎஸ்என்எல் தமிழ் நாடு வட்ட தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் போராட்டக்குழு ஒருங்கிணைப் பாளர் எஸ்.செல்லப்பா கூறியதாவது: வேலை நிறுத்தத்தால் தமிழ்நாடு வட்டத்தில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. இதனால் 6 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சுமார் 600 கோபுரங்கள் செயலிழந்து வாடிக் கையாளர் சேவைகள், வங்கி ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதேநிலைதான் நாடுமுழுவதும் இருந்தது.போராட்டக்குழுவினரை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொலைத் தொடர்புத் துறை அமைச் சர் மறுத்து வருகிறார். எனவே, கூட்டமைப்பு வியாழனன்று (பிப்.21) தில்லியில் நிர்வாகிகள் ஒன்றுகூடி ஆலோசித்து தீவிர போராட் டத்தை அறிவிப்பார்கள் என்றார்.