3நாட்கள் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் AUAB தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் உரித்தாக்குகிறது. வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய மாநில மாவட்ட AUABக்களுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது. நமது கோரிக்கைகளை வென்றடைய கீழ்கண்ட முடிவுகளை இந்த கூட்டம் ஏகமனதாக மேற்கொண்டது.

1) டெல்லியை சுற்றி உள்ள மாநிலங்களில் இருந்து ஊழியர்களை திரட்டி 06.03.2019 அன்று பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி. 
2) 28.02.19 க்குள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது. 
3) பாரத பிரதமர் மற்றும் தொலை தொடர்பு அமைச்சர் ஆகியோருக்கு ட்விட்டரில் செய்தி அனுப்புவது.
4) பல்வேறு வாய்ப்புகளையும் பயன்படுத்தி, சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் தொலை தொடர்பு அமைச்சரை சந்திப்பது.
தோழர் P.அபிமன்யு பொதுச்செயலாளர்