“தார்மீக அடிப்படையில் பார்த்தால், போர் என்பதே ஒரு தோல்விதான்; எனவே, அதில்யார் வெற்றிபெற்றார்கள் என்பதுமுக்கியமல்ல” என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார்.புனீத் என்ற அந்த ராணுவ வீரரின் மனைவி, ‘ஸ்க்ரோல்’ இணையதள ஏட்டிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதி லேயே இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:நான் சமாதானத்தை விரும்புகிறேன். இந்தியாவில் போர்மேகம்சூழ்ந்துள்ளதால் சமாதானம் என்றவார்த்தையைப் பயன்படுத்து கிறேன். என் கணவர் புனீத்தைத் திருமணம் செய்ததில் இருந்து 13 ஆண்டுகள் அவரோடு ராணுவவாழ்க்கையை வாழ்ந்திருக் கிறேன். புனீத்துக்கு மனைவி யான புதிதில், போரின் வெற்றி கொண்டாடப்படுவதை, மற்ற பெண்களைப் போல நானும் ரசித்திருக்கிறேன். ஆனால், இன்று நானே சமாதானத்தை விரும்பும் அளவிற்கு திசை மாறியிருக்கிறேன். போரின் கடுமையை உணர்ந்திருக்கிறேன். அதன் வன்முறையை அறிந்திருக்கிறேன். நாம் வாழும் இந்த உலகில்போர் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கிறது? சிரியா, ஏமனில் குண்டு வீசப்பட்ட படங்களைப் பத்திரிகைகள் வெளியிட்டபோது, இந்த எண்ணம்தான் எனக்கு மேலோங்கியது. 1965-ஆம் ஆண்டு நடந்த இந்திய – பாகிஸ்தான் போரில்பலர் இறந்தனர். பலர் காயமுற்ற னர். அவர்களின் உடலை மூவர்ணக் கொடி போர்த்தி, வீட்டுக்கு கொண்டுவரும் போதுஅந்தக் குடும்பம் என்ன பாடு பட்டிருக்கும். அந்த வீரரின் இறப்பு, கடைசிவரை அந்த குடும்பத்தை அழவைத்துக் கொண்டுதானே இருக்கும்..என் கணவர் போரிடு வதற்காகவே பயிற்சி பெற்றவர்.அந்தவகையில் இதுபோன்ற போர்ச்சூழலை எதிர்கொள்ளும் போது, என்னால் என்ன செய்ய முடியும்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறேன். நான்போருக்கு எதிரானவளாக இருந்தாலும், போரிடு வதற்காகவே இருக்கும் ஒருவரையல்லவா, நான் திருமணம் செய்திருக்கிறேன்..நல்வாய்ப்பாக, கடந்த 13 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நிலையை நான் எதிர் கொள்ளவில்லை. சமாதானம் என்ற என் தார்மிகத்திற்கு சோதனை வரவில்லை. கடந்த மாதம்தான் என் கணவர் ஓய்வுபெற்றார். நான் ராணுவத்திற்கு எதிரானவள் அல்ல. போருக்கு மட்டுமே எதிரானவள்.இவ்வாறு அந்த பெண்மணி கூறியுள்ளார்.

BSNL Employees Union Nagercoil