இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி – வாகா எல்லைக்கு அழைத்து வந்தனர். அபிநந்தனுக்கு வரவேற்பு அளிக்கும்பொருட்டு ஏராளமான மக்கள் வாகா எல்லையில் திரண்டிருந்தனர்.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியமிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேசமயம், இந்திய விமானம் ஒன்றும் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த விமானி விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.இருநாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட சூழ்நிலையில், அபி நந்தனை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். பாகிஸ்தானி லும் அபிநந்தனை திரும்ப ஒப்படை க்குமாறு மக்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வியாழனன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.அபிநந்தனை பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால்இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துவிட்டது. பாகிஸ்தான் வான்வெளி யில் இந்திய விமானம் பறக்க அனுமதி மறுத்தபாகிஸ்தான், அபிநந்தனை அட்டாரி-வாகா எல்லை வழியாக அனுப்புவதாக தெரிவித்தது.அதன்படி அபிநந்தனை அட்டாரி எல்லையில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தன. அபிநந்தனை வரவேற்க ஏராளமான மக்கள் அட்டாரி வாகா எல்லையில் கூடினர்.வெள்ளி காலை முதலே மேளதாளங்கள் முழுங்க, தேசியக் கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.இந்நிலையில், ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை யகத்தில் இருந்து அபிநந்தன், லாகூர் வரை விமானத் தில் அழைத்து வரப்பட்டார்.

பின்னர் லாகூரில் இருந்து கார் மூலம் அட்டாரி எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.எல்லை வந்தபிறகு அங்கேயே அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் இருதரப்பு ராணுவ நடைமுறைகள் தொடங்கின. ஆனால்அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது.மாலை 6 மணிக்கு வழக்கமாக நடக்கும் கொடி இறக்கும் நிகழ்ச்சி யும் ரத்து செய்யப்பட்டது.வாகா எல்லையில் ஏராளமான மக்கள் எதிர்பார்ப்போடு குவிந் திருந்த நிலையில், இரவு 8 மணி வரை அபிநந்தன் வாகாஎல்லைக்குள் அழைத்து வரப்படவில்லை. ராணுவ நடை முறைகளால் தாமதமாகிறது என அதிகாரிகள் கூறினர். அதுவரையிலும் அட்டாரி எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அலுவலகத்தில் அவர் வைத்திருக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தாமதமான போதிலும் எல்லையைத் தொட்ட இந்திய வீரனுக்காக மக்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் குரல் எழுப்பியவாறு காத்திருந்தனர். (பிடிஐ

BSNL Employees Union Nagercoil