புதுதில்லி, மார்ச் 8 –

இந்தியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 19 சதவிகிதம் குறைவாகவே ஊதியம் வாங்குவதாக மான்ஸ்டர்.காம் ஆய்வில் தெரியவந்துள்ளது.‘ஆணுக்கும், பெண்ணுக்குமான ஊதியப் பாகுபாடு இந்தியாவில் 19 சதவிகிதமாக உள்ளது. ஆணின் ஊதியம் 242.49 ரூபாயாக இருந்தால், பெண்ணின் ஊதியம் அதைவிட 46.19 ரூபாய் குறைவாக- 196.3 ரூபாய் என்று உள்ளது. அதிக திறன் நிலை சார்ந்த பணிகளில் ஊதியப் பாகுபாடு மிக அதிகமாகவும், பாதி திறன் சார்ந்த வேலைகளில் ஊதியப் பாகுபாடு குறைவாகவும் உள்ளது’ என்று மான்ஸ்டர்.காம் ஆய்வு கூறியுள்ளது.மேலும், இந்த ஆய்வில் பங்கெடுத்த பெண்களில் 60 சதவிகித பேர், தங்களின் பணியிடத்தில் பாலினப் பாகுபாடு நிலவுவதாகவும், மூன்றில் ஒரு பெண் உயர்மட்ட பணிக்கு எளிதாகச் செல்ல முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். ‘மீ டூ’ இயக்கங்கள் பெண்கள் அதிகாரம் பெற காரணமாக இருக்கிறது என்று 70 சதவிகித ஆண்கள் கூறியுள்ளனர். அதேநேரம், பாலின சமத்துவத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டுமென 71 சதவிகித ஆண்களும், 66 சதவிகித பெண்களும் விரும்புகின்றனர். 50 சதவிகித பெண்கள் இரவு வேலைகள் பாதுகாப்பற்றது அல்லது விருப்பமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.இந்த ஆய்வானது வேலை செய்யும் நிலையில் இருக்கக்கூடிய 3 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் 24 சதவிகிதம் பேரும், பெங்களூருவில் 23 சதவிகிதம் பேரும், தில்லியில் 18 சதவிகிதம் பேரும், மெட்ரோ அல்லாத இந்திய நகரங்களில் வசிக்கும் 28 சதவிகிதம் பேரும் பங்கெடுத்துள்ளனர். அத்துடன் ஆய்வில் கலந்து கொண்டவர்களில் சுமார் 40 சதவிகித பெண்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஆவர்.

BSNL Employees Union Nagercoil