சுற்றறிக்கை
2019 மார்ச், 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தின்ங்களிலும் தொடர்ச்சியாக AUABயின் கூட்டங்கள் நடைபெற்றது. BSNL ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது மற்றும் BSNLன் புத்தாக்கம் ஆகிய விஷயங்கள் அக்கறையுடன் விவாதிக்கப்பட்டது. AUABயின் தலைவர் தோழர் சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, BSNL MS, ATM மற்றும் BSNL OA ஆகிய சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ மத்திய சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
முதல் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக 14.03.2019 அன்று நடைபெற்றக் கூட்டத்தில் AUAB ஒருங்கிணைப்பாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் விளக்கி பேசினார். பின்னர் விரிவான விவாதம் நடைபெற்றது. BSNL நிறுவனத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியை உருவாக்கிய அரசாங்கத்தின், குறிப்பாக DoTயின் BSNL விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் உறுதியான இயக்கம் ஒன்றை நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. விரிவான விவாதங்களுக்கு பின் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன:

 1. அரசாங்கம் மற்றும் DoTயின் BSNL விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக 05.04.2019 அன்று சஞ்சார் பவர் நோக்கிய வலுவான பேரணியை நடத்துவது. இந்த பேரணியில் உரையாற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைப்பது.
 2. இந்த பேரணி மற்றும் தற்போது BSNL சந்திக்கும் பொருளாதார நெருக்கடி அகியவற்றை விளக்கும் வகையில் விரிவான சுற்றறிக்கையினை ஊழியர்களுக்கு அனுப்புவது.
 3. BSNLன் புத்தாக்கத்திற்கு ஆதரவு கோரும் வகையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அணுகுவது.
 4. BSNLன் புத்தாக்கத்தில் தலைவ்யிட வேண்டும் என பிரதமர் அலுவலக முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவது.
 5. BSNLன் புத்தாக்கத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் அரசியல் கட்சிகளின் மாநில தலைவர்களை மாநில AUAB தலைவர்கள் சந்திப்பது.
 6. AUABயின் கோரிக்கை மனுவில் கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை விவாதிக்க தொலை தொடர்பு துறையின் செயலாளரோடு ஒரு சந்திப்பிற்கு நேரம் கோரி கடிதம் அனுப்புவது.
 7. BSNLன் புத்தாக்கத்திற்கு ஆதரவு கோரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களை சந்தித்து மனு கொடுப்பது.
 8. AUAB யின் கடுமையான எதிர்ப்பையும் மீறி டவர் பராமரிப்பை OUTSOURCING செய்ய எடுக்கப்பட்ட முடிவை BSNL நிர்வாகம் தொடர்ந்து அமலாக்க முயற்சிக்கிறது. இதனை நிறுத்த வேண்டும் என மற்றுமொரு கடிதத்தை BSNL CMDக்கு எழுதுவது.
 9. அனைத்து BSNL ஊழியர்களும் TWITTER கணக்கை துவங்கி “SAVE BSNL’ கணக்கினை FOLLOW செய்வது.
 10. AUAB யின் அடுத்தக் கூட்டம் 25.03.2019 அன்று மாலை 02.30 மணிக்கு நடைபெறும்
  நன்றி
  தோழமையுள்ள,
  தோழர் சந்தேஸ்வர் சிங் தோழர் P.அபிமன்யு
  தலைவர் AUAB ஒருங்கிணைப்பாளர்AUAB