பிப்ரவரி மாத ஊதியம் ஊழியர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி தரப்பட்டது என்பது அனைவரையும் பெருமூச்சு விட வைத்துள்ளது. இந்த ஊதியத்திற்காக DoT நிதி ஒதுக்கியதாக ஒரு சில மீடியாக்கள் அறிவித்துள்ளன. இது தவறான செய்தியாகும். தன் சொந்த வருவாயிலிருந்தே BSNL நிறுவனம் ஊதியத்தை வழங்கியுள்ளது. 13.03.2019 அன்று AUAB தலைவர்கள் BSNL CMD அவர்களை சந்தித்து ஊதியம் வழங்காதது தொடர்பாக விவாதித்தபோது, 20.03.2019 அன்று ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், BSNLஇன் வருவாய் வசூலில் இருந்து தான் ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையில் 14.03.2019 அன்று DoTயிலிருந்து BSNLக்கு 500 கோடி ரூபாய் வந்துள்ளது. DoTக்காக BSNL நிறுவனம் ஏற்கனவே மேற்கொண்ட பணிகளுக்காக அதற்கு DoT 2,500 கோடி ரூபாய்கள் தரவேண்டி உள்ளது. அந்த 2,500 கோடியிலிருந்து தான் 14.03.2019 அன்று DoT 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. BSNL நிறுவனம் தனது சொந்த ஆதாரங்களில் இருந்து தான் தனது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளது என்பதில் பெருமிதம் கொள்வோம்.

BSNL Employees Union Nagercoil