‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு மூலம் மக்களின் வரிப்பணம் அனைத்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளி இறைக்கப்படுவதாக, தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பொது சுகாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று மோடி தம்பட்டம் அடித்துக் கொண்ட திட்டம் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடுபெறலாம் என்று கூறிய மோடி, ஆனால்,யாரும் பயனடைந்து விடக்கூடாது என்பதற்காகவே, கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஏராளமான விதிமுறைகளையும் திணித்தார்.அப்போதே, உண்மையில் இதுமக்களுக்கான திட்டமல்ல, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கான திட்டம் மட்டுமே என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இவை பொய்க் குற்றச்சாட்டுக்கள் என்று பாஜக-வினர் பூசி மெழுகினர். பல ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக, ஊடகங்களில் விளம்பரங்களை செய்தனர்.இந்நிலையில்தான், எய்ம்ஸ் மருத்துவர்களை உள்ளடக்கிய பொது சுகாதாரவல்லுநர்களே, மோடியின் ஆயுஷ்மான்பாரத் திட்டம், தனியார் இன்சூரன்ஸ் முதலாளிகளுக்கான திட்டம்தான் என்றுஉண்மையைப் போட்டு உடைத்துள்ளனர்.இதற்காக, ‘ஆயுஷ்மான் பாரத்: உண்மையா; கதையா?’ என்ற பெயரில்கருத்தரங்கையே நடத்திய அவர்கள், அதில், ‘ஆயுஷ்மான் பாரத்’ மோசடியை உரித்துத் தொங்க விட்டுள்ளனர்.பொதுவாக இதுபோன்ற மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள் கொண்டுவரப் படும்போது, அத்திட்டங்களின் ஒருபகுதியாக அரசு மருத்துவமனையில் வசதிகளை அதிகரித்து, மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்குஏற்பாடு செய்யப்படும். ஆனால், ஆயுஷ் மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள்தான் ஊக்குவிக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் விகாஸ் பாஜ்பாய், இக்கருத்தரங்கில் உரையாற்றியபோது, “ஏற்கெனவே ஆயுஷ்மான் போன்ற பல திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன; இதற்கானகாரணம் திட்டங்களை சரியாக செயல்படுத்தாததே ஆகும்; குறிப்பாக, சிகிச்சை முறைகளுக்கு அளிக்கும் முன்னுரிமை ஒருபக்கம் இருந்தாலும், நோயைத் தடுக்கும் முறைகளுக்கான திட்டம் முக்கியமானது; ஆனால், ‘ஆயுஷ்மான் பாரத்’ அதில் கவனம்செலுத்தவில்லை” என்று குறிப்பிட்டுள் ளார்.சிகிச்சைக்கு நாங்கள் இருக்கிறோம் என்று வரும் தனியார்கள், நோய்த் தடுப்புஎன்று வரும்போது அதில் தனியார்கள்ஈடுபடமாட்டார்கள்; என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்பதை சூசகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.“ஆயுஷ்மான் பாரத்தில் புறநோயாளிகள் சேர்க்கப்படவில்லை; உள்நோயாளிகளை விட புறநோயாளிகள் தான் அதிகம்; அந்த வகையில், எந்தவொரு பொது சுகாதாரத் திட்டமும், அனைத்து வகை சிகிச்சைகளுக்கும் காப்பீடு அளித்தால் மட்டுமே நல்ல விளைவைத்தரும்” என்று கூறியுள்ளார், எய்ம்ஸ் மருத்துவமனையின் உயிரி வேதியியல் துறைத்தலைவர் சுப்ரதோ சின்ஹா.“மக்களுக்கான முழுமையான மருத்துவ வசதிகளை அரசாங்கம் அளிக்காமல், தனியாரிடமிருந்து அதனைப் பெறுவது தவறானது; இதனால் அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது என்பதே பொருள்” என்று கூறியிருக்கிறார் மற்றொரு எய்ம்ஸ் மருத்துவரான பிரதாப் சரண். “ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் மக்களின் பணம் உள்ளது. ஆனால், மத்திய அரசானது இந்த காப்பீட்டுத் திட்டம் மூலம் மக்களின் பணத்தை தனியாருக்கு அளிக்கவே வகை செய்கிறது.” என்றும் பிரதாப் சரண் குற்றம் சாட்டியுள்ளார்.