டெல்லி: இந்தியாவின் தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் (National Sample Survey Office – NSSO) Periodic Labour Force Survey 2017 – 18 அறிக்கையில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவி கிராம புறங்களில் விவசாயக் கூலிகளாக இருப்பவர்களில் 3 கோடி பேரின் வேலைகள் பறி போய் இருக்கிறதாம். இதுவும் கடந்த 2011 – 12-ம் ஆண்டில் இருந்து 2017- 18-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டில் 3 கோடி பேருக்கு வேலை பறி போய் இருக்கிறது. 2011 – 12-ம் ஆண்டில் இந்திய கிராம புறங்களில் 10.9 கோடி பேர் விவசாயக் கூலிகளாக இருந்தார்கள். தற்போது Periodic Labour Force Survey 2017 – 18 அறிக்கையின் படி 7.7 கோடி பேராக சர்நிதிருக்கிறது. மொத்தம் 3.2 கோடி விவசாயக் கூலிகளின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லையாம்.

குடும்பங்களின் எண்ணிக்கை விவசாயக் கூலி வேலைகளைச் செய்து வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்த குடும்பங்களின் எண்ணிக்கை 2011 – 12-ல் 3.6 கோடி குடும்பங்களாக இருந்தது. ஆனால் 2017 – 18-ல் 2.1 கோடி குடும்பங்களாக சரிந்திருக்கிறது.

வேலை இழப்புகள் விவசாயக் கூலிகளாக கிராம புறங்களில் வேலை பார்த்த ஆண்களில் 7.3 சதவிகிதத்தினருக்கு இன்ரு வேலை இல்லை. அதே போல் விவசாயக் கூலிகலாம கிராம புறங்களில் வேலை பார்த்த பெண்களில் 3.3 சதவிகிதத்தினருக்கு இன்று வயல் வெளிகளில் வேலை இல்லையாம்.

கண்டனம் இப்படி இந்திய அரசு தன் இஷ்டத்துக்கு தரவுகளை மறைப்பது பொருளாதார விவகாரங்களை வெளிப்படையாக வெளியிடாமல் இருப்பது போன்றவைகளுக்கு உலகம் முழுவதில் இருந்தும் 108 பொருளாதார வல்லுநர்கள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஆனால் இப்போது வரை அரசு பொருலாதாரத் தரவுகள் எந்த ஆதிக்க

ஆம் செய்தோம் அரசின் சார்பாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த மத்திய பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் பேசினார். அதில் அரசு தரவுகளை மாற்றியது உண்மை தான், ஆனால் அரசே தரவுகளை மாற்ற அடிபப்டையாக இருந்த தரவுகளும் உண்மை தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்” என கமல் போல் பேசி மழுப்பி இருக்கிறார்

Read more at: https://tamil.goodreturns.in/news/2019/03/23/3-crore-casual-labors-lost-their-jobs-last-five-years/articlecontent-pf71632-013818.html

Read more at: https://tamil.goodreturns.in/news/2019/03/23/3-crore-casual-labors-lost-their-jobs-last-five-years/articlecontent-pf71632-013818.html