சஞ்சார் பவன் நோக்கிய பேரணியில் பங்கேற்க வருபவர்களுக்கு விடுப்பு அனுமதிக்கக் கூடாது என கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள SR பிரிவிலிருந்து அனைத்து CGMகளுக்கும் வெளியிடப்பட்ட கடிதத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பையினை BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் BSNL CMDயை 01.04.2019 அன்று சந்தித்த போது தெரிவித்தார். சஞ்சார் பவன் நோக்கிய பேரணியில் பங்கேற்றதற்காக ஊதிய வெட்டு செய்துவிட முடியாது என்பதையும் அவர் தெளிவு படுத்தினார். இதில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக BSNL CMD உறுதி அளித்தார். இது தொடர்பாக ஏற்கனவே DIRECTOR(HR) அவர்களிடமும் விவாதிக்கப்பட்டிருந்தது. அவர் தனக்கு தெரியாமலேயே இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பேரணியில் பங்கேற்றவர்களின் ஊதியத்தை வெட்டுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. எனவே நமது தோழர்கள் அது தொடர்பான தகவலை புறக்கணித்து, புதுடெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க வேண்டுமென நமது மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. நாகர்கோவில் தோழர், மைக்கேல்தஸ் மற்றும் ஞானமணி ஆகிய தோழர்களும் டெல்லி நோக்கிசென்று கொண்டிருக்கிறார்கள்

BSNL Employees Union Nagercoil