தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக்கை கலைத்து விட்டு மீண்டும் திட்டக் கமிஷனைக் கொண்டு வருவோம் என 19.04.2019 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நாடு விடுதலை அடைந்த பின்னர் 1950ஆம் ஆண்டு, நாடு திட்டமிட்ட முறையில் பொருளாதாரத்துறையில் வளர, திட்டக் கமிஷன் உருவாக்கப்பட்டது. எனினும், 2014ஆம் ஆட்சிக்கு வந்தவுடன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திட்டக் கமிஷனைக் கலைத்து விட்டு நிதி ஆயோக்கை உருவாக்கினார். அது உருவாக்கப்பட்டதிலிருந்து நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதற்கான ஒரு அம்ச திட்டம் மட்டுமே நிதி ஆயோக்கிற்கு வழங்கப்பட்டது. BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களை மூடி விட வேண்டும் என நிதி ஆயோக் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். மேலும் BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அது நிராகரித்தது. மற்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 4G சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் போது, BSNLக்கு 4G அலைக்கற்றை வழங்குவதால் என்ன பயன் என்றும் நிதி ஆயோக் கேள்வி எழுப்பியிருந்தது. நிதி ஆயோக் நிறுவனம் 100 சதவிகிதம் பொதுத்துறை விரோத, கார்ப்பரேட் ஆதரவு தன்மை கொண்டது. இந்த சூழ்நிலையில் தான், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்பட்டு திட்டக் கமிஷன் மீண்டும் கொண்டு வரப்படும் என்கிற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் அறிவிப்பை BSNL ஊழியர் சங்கம் வரவேற்கிறது.

BSNL Employees Union Nagercoil