கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக பொருளாதாரம் குறித்த மாத அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

“நிக்கேய் இந்தியா மெனிஃபக்சரிங் பர்சேசிங் மெனேஜர்ஸ் இன்டெக்ஸ்” என்ற இந்தியா உற்பத்தி குறித்தான குறியீடு மார்ச் மாதத்தில் 52.6 ஆகவும், ஏப்ரல் மாதத்தில் 51.8 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வர்த்தக நிலைகளில் உள்ள பலவீனத்தையே காட்டுகிறது. இதைத் தொடர்ந்து பிஎம்ஐ 50 புள்ளிகளுக்கு மேலாக தொடர்ந்து 21வது மாதங்களாக 50 புள்ளிக்கு மேலாகவே உயர்ந்துள்ளது. 

இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட உற்பத்தி குறியீடானது, தொழில் புதிய வரத்துகள் குறைந்துள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் குறைவு, புதிய தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகள் அதிகமுள்ளதாலும், இந்த தொழில் குறித்த உற்பத்தி ஒரு மெதுவான வளர்ச்சியே இருந்து வருகிறது.

இதுகுறித்து பொருளாதார வல்லுனர் போலியானா டி லிமா கூறுகையில், ”உற்பத்தியாளர்கள் பேருக்கு தான் வேலை அதிகரித்துள்ளது என்று மெருகேற்றுகிறார்கள். ஆனால் உண்மையில், அப்படி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வேலை அதிகரித்துள்ளதாக தெரியவில்லை” என்று கூறுகிறார்.

இதுகுறித்து, கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்கள் கூறுகையில், ”தேர்தல் நேரம் என்பதால் புதிய தொழில் வர்த்தக வளர்ச்சிகள் குறைவாக இருக்கிறது, அதே நேரம் புதிய நிறுவனங்களும் தங்களது புதிய நடவடிக்கைகளை செயல்படுத்தாமல் இருக்கின்றன. மேலும், தேர்தலுக்கு பிறகு வரப்போகும் அரசு, தொழில் துறைக்கான நெறிமுறைகளை எவ்வாறு கொண்டு வரும் என்று தெரியாததால் பல மாதங்களாக தொடர்ந்து உற்பத்தியும் குறைந்துள்ளது. தொழில் துறை வளர்ச்சியும் குறைந்துள்ளது” என்று கூறுகின்றன.

BSNL Employees Union Nagercoil