வெளி நாடு செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு தமிழ் மாநில நிர்வாகம் ஏற்படுத்தும் தடைகள் தொடர்பாக மத்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மூன்று மாதங்களுக்கு மட்டும் விடுப்பு அனுமதிக்கப்படும் என அந்த தடையில்லா சான்றிதழில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது போன்ற கட்டுப்பாடுகள் எதையும் கார்ப்பரேட் அலுவலகம் விதிக்கவில்லை. இந்த பிரச்சனையை கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள PGM)PERS) திரு அருண் குமார் அவர்களிடம் 08.05.2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் விவாதித்தார். இது தொடர்பாக தேவையான வழிகாட்டுதலை தமிழ் மாநில நிர்வாகத்திற்கு வழங்க PGM)PERS) ஏற்றுக் கொண்டுள்ளார்.

BSNL Employees Union Nagercoil