பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு கடந்த நான்கு மாதங்க ளாக சம்பளம் வழங்கப்படவில்லை. பல கட்ட போராட்டங்களை தொழி லாளர்கள் நடத்தியும் நிறுவனத்தின் நிதி நிலையை நிர்வாகம் காரணம் காட்டுகிறது மற்றவற்றிற்கு கடன் சொல்ல முடியும் பாலுக்கு அழும் குழந்தைகளுக்கு பசிக்கும் வயிற் றுக்கு எப்படி கடன் சொல்ல முடியும் இன்று வரை பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங் கள் பட்டினியோடு பரிதவிக்கின்றனர். இந்த நிலையைக் கண்டித்து நாகர்கோவில் பிஎஸ்என்எல் PGM அலுவலகம் முன்பு செவ் வாய்க்கிழமை தொடர் உண்ணா விரதப் போராட்டம் R.சுயம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை A.V. பெல்லார்மின் Ex MP துவக்கிவைத்தார்,தோழர்கள் K.ஜார்ஜ், A.செல்வம்,C.ஆறுமுகம், P.ராஜூ,கோரிக்கையை விளக்கிபேசினார்கள், CITUசங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் செண்பகம, AIIEA சங்கத்தின் நெல்லை மண்டல செயலாளர் தோழர் முத்துகிருஷ்ணன்,AILU சங்கத்தின் மாவட்ட தலைவர் மரியஸ்டிபன், மத்திய அரசு அனைத்து ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டச் செயலாள்ர் தோழர் ராஜநாயகம், மற்றும் AIBDPA சங்கத்தின் தலைவர்கள் தோழர் மீனாட்சிசுந்தரம்,காளிபிர்சாத் உட்படதோழர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

P.Raju DS BSNLEU Nagercoil.

BSNL Employees Union Nagercoil