இந்தியாவில் புதிய முதலீடுகளானது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்குப் போயிருப்பது தெரியவந்துள்ளது.இதுதொடர்பான விவரங்களை, இந்திய பொருளாதார கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. அதில், “2019 ஜூன் மாதத்தில், இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ரூ. 43 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தன. இது, முந்தைய மார்ச் வரையிலான காலாண்டோடு ஒப்பிடுகையில் 81 சதவிகிதம் குறைவு;அதேபோல 2018 ஜூன் காலகட்டத்தை ஒப்பிட்டால்,87 சதவிகிதம் குறைவு” என்று கூறப்பட்டுள்ளது.

“திட்டங்களின் மதிப்பு உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டாலும், முதலீடு செய்வதற்கு விருப்பமற்ற மனநிலையிலேயேபுதிய முதலீட்டாளர்கள் இருக்கின்றனர்; இவ்வாறுகுறைந்த அளவிலான திட்டங்கள் அறிவிப்புக்கு, முதலீடுகள் குறைந்ததே முக்கியக் காரணம் என்றும் சொல்லலாம்; இதற்கு முந்தைய காலாண்டில்அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு முதலீடு அளிப் பதை எடுத்துக்கொண்டாலும், 77 சதவிகிதம் குறைந்துள்ளது. தேர்தல் காலம் என்பதாலேயே முதலீடுகள் குறைந்தது என்றால், கடந்த 2014 தேர்தல் காலத்தில்இவ்வாறு நடக்கவில்லை; அப்போது முதலீடுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது. 2004 மற்றும்
2009 தேர்தல்களின் போது முதலீடு குறைவு இருந்தது என்றாலும், அது தற்போதைய அளவிற்கு மோசமாக இல்லை” என்றும் பொருளாதாரக் கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil