சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பனை செய்வதை கண்டித்து திருச்சி பெல் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பெல் டிரைனிங் சென்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பிரபு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி துணைத்தலைவர் அருணன், சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் ஆகியோர் பேசினர். செயலாளர் பரமசிவம், பொருளாளர் பெரியசாமி, நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, சையத் அலி, அருள்மொழி மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்காதே! நாடாளுமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் ஆவேசக் குரல்