கடந்த ஜூன் மாதத்திய, இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.இதில், கடந்த 8 மாதங்களில் இல்லாத வகையில்,ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவின் ஏற்றுமதி 9.71 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.பொதுவாக இந்தியாவிலிருந்து நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் சாதனங்கள், பெட்ரோலியப் பொருட்கள், தோல் பொருட்கள், ஆயத்தஆடைகள், ரசாயனங்கள், கடல் உணவுப் பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோலிய கச்சா எண்ணெய், பாமாயில், தங்கம் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன.இந்நிலையில்தான், கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 9.71 சதவிகிதம் சரிவடைந்து இருக்கிறது என்ற புள்ளிவிவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்து 501 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே (சுமார் ரூ. 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி) பொருட்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளன. அதேநேரம், வெளிநாடுகளிலிருந்து 4 ஆயிரத்து 29 கோடி டாலருக்கு (சுமார் ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி) பொருட்கள் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன.இதில், தங்கம் மட்டும் 270 கோடி டாலருக்கு (சுமார்ரூ. 19 ஆயிரம் கோடி) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஜூன் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறையானது, ஆயிரத்து 528 கோடி டாலராக(சுமார் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது.2018 செப்டம்பரில் ஏற்றுமதி, 2.15 சதவிகிதம் என்றஅளவிற்கு குறைந்து இருந்தது. அதன்பிறகு, தற்போது2019 ஜூனில்தான் ஏற்றுமதி 9.71 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

BSNL Employees Union Nagercoil