அரசாங்கம் தனது முதலீட்டை அதிகரிப்பதின் மூலம் BSNLன் பொருளாதார புத்தக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரி வருகிறது. BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காக, அரசாங்கம் ஏன் வரி செலுத்துபவரின் பணத்தை வீணடிக்க வேண்டும் என மீடியாக்களில் பலர் வாதிட்டு வருகின்றனர். ஆனால், தனது கடந்த 18 1/2 ஆண்டு கால இருப்பில் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து BSNL நிறுவனம் ஒரு நயா பைசா கூட பொருளாதார உதவியாக பெற்றதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதே சமயத்தில், 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் அரசாங்கம், பொதுத்துறை வங்கிகளில் தனது முதலீட்டை 2.69 லட்சம் கோடி ரூபாய்கள் அதிகரித்துள்ளது என 17.07.2019 அன்றைய TIMES OF INDIA பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய்கள் வாராக் கடன்களை இந்த பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துவிட்ட காரணத்தால் அவற்றிற்கு உதவி செய்ய இந்த முதலீட்டு அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாராக் கடன்களில் பெரும்பங்கு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், வாங்கி, திருப்பிக் கட்டாதவை என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். அந்த வங்கிகள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மேலும் புதிய கடன்களை வழங்குவதற்காகவே, அரசாங்கம் இந்த மூலதன அதிகரிப்பை செய்துள்ளது. எனவே இரண்டாண்டு காலத்தில் அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளில் தனது முதலீட்டை 2.69 லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு அதிகரிக்க முடியும் என்று சொன்னால், BSNLன் பொருளாதார புத்தாக்கத்திற்காக, ஏன் தனது முதலீட்டை அதிகரிக்கக் கூடாது? அரசாங்கத்தின் BSNL விரோத கொள்கைகள் காரணமாகவே, BSNL சீரழிக்கப்பட்டதால், நமது இந்த கோரிக்கை மிக மிக நியாயமானது.

BSNL Employees Union Nagercoil