ஊழியர்களுக்கான ஊதிய பேச்சு வார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை ஒட்டி அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சங்கங்களான BSNL ஊழியர் சங்கமும், NFTEயும் நிர்வாகத்திற்கு 14.05.2019 அன்று தொலை தொடர்பு துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தன. மே மாதம் 14ஆம் தேதி கொடுத்த கடிதத்திற்கு பதிலை கார்ப்பரேட் அலுவலகத்தில் SR பிரிவு 15.07.2019 அன்று பதில் கொடுத்துள்ளது. அங்கீகாரத்திற்கான காலம் முடிவடைந்து விட்டதால், ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தை தற்போது நடத்தக் கூடாதாம். 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவடைந்து அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்பு தான் தொடரும். அது சரி. 16.07.2019 அன்று தர்ணா என்றால் வேக வேகமாக செயல்பட்டு தொழிற்சங்கங்களை மிரட்டுவதில் வெகு வேகமாக செயல்பட்ட SR பிரிவு, இதற்கு பதில் கொடுக்க இரண்டு மாத காலம் ஆகிறது. SR பிரிவு என்றால் ஊழியர் உறவு பிரிவா இல்லை உறவு முரண்பாடு பிரிவா? தெரியவில்லை

BSNL Employees Union Nagercoil