தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை ஆகஸ்ட் 10 ஆம் தேதி யன்று தருமபுரில் பிரதிநிதித்துவ பேரவை மத் திய அரசு ஊழியர் மகாசம் மேளன பொதுச்செயலாளர் எம். துரைபாண்டியன் துவக்கி வைத்துபேசியதாவது, இந்தியா விலேயே முதன் முதலாக 1904ஆம்  ஆண்டு தமிழகத்தில் திருவேற் காடு, திருவூர் ஆகிய இடங்களில் கூட்டுறவு சங்கம் தொடங்கப் பட்டது. கூட்டுறவுத்துறை ஊழி யர்கள் மக்களுடன் இருப்பதோடு, சேவைகளை செய்து வருகின்ற னர். கடந்த காலங்களில் அரசு ஊழியர் சங்கமும், ஆசிரியர் சங்க மும் போராட்டம் நடத்தியதின் விளைவாக மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான ஊதி யம்பெற்று வருகின்றனர். இது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறினார். மோடி ஆட்சிக்கு வந்த உடனே விலைவாசியை குறைப்பேன், வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தைமீட்டு இந்திய குடிமகன் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம், வருடத்திற்கு 2 கோடிபேருக்கு வேலை, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பேன் என தெரி வித்தார். ஆனால் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட் டது. குறிப்பாக பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.60, மலேசி யாவில் ரூ.40, நேப்பாளத்தில் ரூ.65 க்கும் விற்கப்படுகிறது. இந்தியாவில் ரூ.75.90 விற்கப் படுகிறது. இந்திய அரசு நினைத் தால் ரூ.37 ரூபாய்க்கு விற்க லாம். ஆனால் மோடி, ரிலையன்ஸ் கம்பெனியை வாழ வைக்கவேண் டும் என்பதற்காக கடுமையாக விலையை உயர்த்தியுள்ளார். உலக அளவில் டிஸ்கவரி என்ற நூல் எழுதி புகழ்பெற்றவர் நேரு. மார்க்சியத்தை படித்து விட்டு இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களை உரு வாக்கவேண்டும் என நினைத்தார் நேரு.  ஆனால் உலகநாடுகள்  இதற்கு கடன் வழங்கவில்லை. சோவியத்யூனியன் தான் வட்டி யில்லா கடன் வழங்கியது. அதன்  மூலம் பொதுத்துறையை உரு வாக்கி சரித்திரத்தில் இடம் பெற்றார் நேரு. ஆனால் அதற்கு மாறாக பொதுத்துறையை ஒழித் தவர் என்ற வரலாறு படைத்தவர் மோடி என குறிப்பிட்டார். வங்கியை தேச உடமையாக்க வேண்டும் என்று 1969-ஆம் ஆண்டு சொன்னபோது எதிர்த்து வாக்களித்தவர் வாஜ்பாய். இன்று ஜியோவை காப்பாற்ற பிஎஸ்என் எல் அழிக்கப்படுகிறது.ரயில்வே துறை, இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷனில் டீசல் வாங்கி வந்த ரயில்வேதுறை இனிமேல் டீசலை  ரிலையன்சிடமே வாங்கவேண் டும் என மத்திய அரசு சொல்கிறது. ஸ்டேட் பேங்க் பங்குகளில் 70 சதவிகிம் ரிலையன்சுக்கும், மீத முள்ள 30 சதவித பங்குகள் இந்திய மக்களுக்கும் என மத்திய அரசு சொல்கிறது. இந்திய குடியரசுக்கு பதிலாக ரிலையன்ஸ் குடியர சாகிறது.  பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் 6 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் மீட்கப்படும் எனச் சொல்லப்பட்டது.ஆனால் 10 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை  மீட்க, மத்திய அரசு 21 ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் 3 லட்சம் கோடி கணக்கில் வரா பணம் உருவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 60 கோடி இளை ஞர்கள் வேலைக்காக காத்திருக் கின்றனர். இச்சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 56-ஜெ பயன்படுத்தி கட்டாய ஓய்வூதியத்தில் வீட்டிற்கு அனுப் பும் முடிவை மத்திய அரசு உரு வாக்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு  ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இந்தி யாவில் முதன் முதலில் தமிழகத் தில் தான் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து தொடர்ந்துபோராடி வருகிறோம். எனவே வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

BSNL Employees Union Nagercoil