அன்பார்ந்த தோழர்களே,

கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் நமது மத்திய சங்கத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் நமது நிறுவனத்தை பாதுகாக்கவும், ஊழியர்களின் உரிமைகளை வென்றடையவும் அயராது பணியாற்றி உள்ளோம்.

8வது உறுப்பினர் சரி பார்ப்பு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், முன்னிலும் வேகமாக பணியாற்றி உள்ளோம். அவதூறுகளை எதிர்கொண்டு, ஊழியர்களுக்கு நமது நிறுவனத்தை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி, அதனை நாம்தான் செய்ய முடியும் என நமது சங்கத்தின் மீது பெருமிதம் கொள்ள செய்து நேர்மையாக பணியாற்றி உள்ளோம்.

மற்றவர்கள் சில சுயநல சக்திகளின் வலையில் விழுந்து ஊழியர்களை திசை திருப்ப பார்த்தனர். நாம் அரசின் BSNL விரோத, கார்ப்பரேட் விரோத கொள்கைகளை மிகச்சரியாக ஊழியர்கள் மத்தியில் கொண்டு சென்று, அவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும் என்பதை தெளிவு படுத்தியுள்ளோம்.

நமது போராடும் சக்திக்கு வலுவூட்டும் வண்ணம் வாக்களிக்க வேண்டும் என சரியாக வேண்டுகோள் வைத்துள்ளோம்.

நாளை முதல் இரண்டு நாட்கள் மிக முக்கியமான தினங்களாகும். தோல்வி பயத்தில் சிலர் நம்மை provoke செய்யக்கூடும். நாம் அதற்கு இரையாகி விடாமல், அதே சமயம் நாம் இதுவரை canvass செய்துள்ளவர்களையும், நமது உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு வாக்குக்களாக மாற்றும் பணிகளில் கருத்தாக செயல்பட வேண்டும். நாம் செய்த கடுமையான பணிகளால் உருவான பயிரை பத்திரமாக பாதுகாத்து அறுவடை செய்ய வேண்டும்.

நாம் அனைவரும் செய்த அளப்பரிய பணியினை தொடருவோம். வெற்றியை உறுதிப்படுத்துவோம்.

வாழ்த்துக்களுடன்,
S.செல்லப்பா,
மாநிலத் தலைவர்

A. பாபு ராதாகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர்

BSNL Employees Union Nagercoil