ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனமான BSNLஐ புத்தாக்கம் செய்வதற்கான திட்டத்தை நிதியமைச்சகம் நிராகரித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சரவை துணைக்குழு இந்த திட்டத்தை தயாரித்திருந்தது. இந்த திட்டத்திற்கான நிதியேதும் ஒதுக்க முடியாது என்பதை காரணம் காட்டி நிதியமைச்சகம் இதனை நிராகரித்துள்ளது.
புதிய ஒரு திட்டத்தை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அப்போதைய அமைச்சரவை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா அமைச்சரவையின் முன் வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின் அவர் நிதியமைச்சகத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் நிருபேந்திர மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இந்த திட்டத்தை உருவாக்கிய குழுவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர். எனினும், நிதியமைச்சகத்திடம் கொடுத்த பின்னர் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாக முடிவெடுக்கப்பட்டதின் அடிப்படையில், இந்த திட்டத்தில் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்க முடியாது என நிதியமைச்சகம், தெளிவாக தெரிவித்து விட்டது.
BSNLக்கு 4G அலைக்கற்றையினை வழங்குவதற்கான நிதியினையும், அரசாங்கம் வழங்க வேண்டும் என்பது மற்றுமொரு பரிந்துரை. எனினும், இதற்கும் நிதியமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதற்கான நிதியினை BSNL நிறுவனமே வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.
-16.09.2019 தேதியிட்ட மாத்ருபூமி இணைய தள பத்திரிக்கை செய்தி

BSNL Employees Union Nagercoil