புதுதில்லி:
கடந்த சில மாதங்களாகவே மந்தநிலை நிலவுவதாகவும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப் பது உண்மைதான் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சக்திகாந்த தாஸ் மேலும் கூறியிருப்பதாவது:

“2019-20 நிதியாண்டினுடைய முதல் காலாண்டில் 5.8 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சியை கணித்திருந்தோம். ஆனால், முடிவு மிகவும் மோசமாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட பிறகணிப்புகள் எல்லாமே 5.5 சதவிகிதத்துக்குக் கீழே இருந்துள்ளன. ஆனால்,5 சதவிகிதம் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. எனவே, இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஆராய்ந்து வருகிறோம்.கடந்த சில மாதங்களாகவே, மந்தநிலையின் அறிகுறிகளை கண்கூடாக பார்த்தோம். அதனால்தான் சென்ற நிதிக் கொள்கைக் கூட்டத்தில், வளர்ச்சிதான் முதல் குறிக்கோள் என அறிவித்தோம். வட்டி விகிதத்தையும் குறைத்தோம். அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடுகளிலும் ஒரு காலாண்டின் வளர்ச்சியைவிட அடுத்த காலாண்டின் வளர்ச்சி குறைவது வழக்கம் தான். எனினும், அதைச் சொல்லி, தற்போது நம் நாட்டில் ஏற்பட்டிருக் கும் மந்தநிலையை நான் நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால், சர்வதேச நாடுகளின் விவகாரங்களும் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்று சொல்கிறேன். தவிர இந்தியாவில் உள்நாட்டு பிரச்சனைகளும் உள்ளன.தற்போதைய நிலை முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முன்வந்துள்ளது. கட்டுமானத் தொழிலுக்கு சலுகை, ஏற்றுமதி ஊக்கத் தொகை, வங்கிகள் ஒருங்கிணைப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வாகன துறைக்கு ஊக்கச் சலுகை அறிவிப்புகள் என, சில நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. எனவே, நிலைமை சீரடையும் போது வளர்ச்சியும் ஏறுமுகமாக மாறும். ஆனால், இப்போது ஒரு கணிப்பை கூறிவிட முடியாது.இவ்வாறு சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

BSNL Employees Union Nagercoil