1968, செப்டம்பர் 19 வேலை நிறுத்தப் போராட்டம் மத்திய அரசு ஊழியர்கள் தொழிற்சங்க வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு போராட்டமாகத் திகழ்கிறது. குடியரசுத்தலைவர் பிறப்பித்த அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு அவசரச்சட்டத்துக்கு அஞ்சாமல் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கு கொண்ட வீரஞ்செறிந்த வேலைநிறுத்தப் போராட்டம் அது.
         அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தான் என்றாலும் அன்றைய இந்திராகாந்தி அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவிவிட்டது. கைதுகளும், கிரிமினல் வழக்குகளும், வேலை நீக்கங்களும், சஸ்பென்சன்களும், டெர்மினேசன்களும் ஆயிரக்கணக்கில் நடைபெற்றன. உச்ச கட்டமாக துப்பாக்கிச் சூட்டிலும், தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தவர்கள் மீது ரயிலை ஏற்றியதிலும், தடியடி தாளாமல் மாடியிலிருந்து விழுந்ததிலும் 13 பேர் தங்களது இன்னுயிரைப் பலிகொடுத்தனர்.
          அவர்கள் முன்வைத்த தேவை அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியக் கோரிக்கை வீணாகவில்லை. பின்னர் வந்த 3வது ஊதியக்குழு குறைந்த பட்ச ஊதியம் எவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அந்த ஊதியத்தை அது பரிந்துரைக்காத நிலையும் இருந்தது. ஏழாவது ஊதியக்குழு குறைந்த பட்ச ஊதியம் தருவதாகச்சொல்லி ₹ 26000/- க்குப் பதில் ₹18000/- என்று பரிந்துரை செய்திருக்கிறது. அந்தக் கோரிக்கைக்கான போராட்டம் ஒரு நீண்ட நெடிய போராட்டமாகத் தொடர வேண்டிய அவசியம் இருக்கிறது.
           இந்தத் தருணத்தில் செப்டம்பர் 19 போராட்டத் தியாகிகளை நினைவு கூர்வோம்.
               அவர்களது உயிர்த்தியாகம் நமக்கு உத்வேகமூட்டட்டும்.
                உரத்த குரலில் முழங்குவோம்.             Workers unity zindabad.
              Inquilab zindabad.

BSNL Employees Union Nagercoil