பிஎஸ்என்எல் சங்க அங்கீகார தேர்தலில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து 7வது முறையாக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நடைபெற்ற சங்க அங்கீகார தேர்தலில், பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம் ஏழாவது முறையாக தொடர் வெற்றி பெற்று சரித்திர சாதனை புரிந்துள்ளது.  பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம், தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு பல்வேறு இடையூறு களை ஏற்படுத்தி வரும் சூழலில், அதை எதிர்த்து  போராடக் கூடிய பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் வெற்றி மகத்தானது.  

இந்த தேர்தலில் பாஜகவின் ஆதரவு பெற்ற சங்கமான பிடிஇயு  உள்ளிட்ட 18 சங்கங்கள் போட்டியிட்டன.  மொத்தமுள்ள 1,10,000 வாக்கு களில் 48,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முதன்மைச் சங்கமாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்த படியாக என்எப்டிஇ – பிஎஸ்என்எல் சங்கம் 39,000  வாக்குகளை பெற்று இரண்டாவது அங்கீகாரம் பெற்ற சங்கமாக வந்துள்ளது.  பாஜக ஆதரவு பெற்ற பிடிஇயு சங்கம் படு தோல்வியடைந் துள்ளது. மத்திய அரசாங்கம் தொடர்ச்சியாக ஊழி யர்களுக்கு இந்த வருடத்தில் மூன்று முறை ஊதியத்தை காலதாமதப்படுத்தியும், ஒப்பந்த  ஊழியர்களுக்கு 9 மாதங்களாக ஊதியம் தரா மலும், ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்காமலும் இருக்கும் சூழலில்; பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு 4ஜி அலைக்கற்றை வழங்காமலும், சீரழிக்க முயற்சி செய்து வரும் வேளையில் இந்த  தேர்தல் நடைபெற்றுள்ளது.  கடந்த 15 ஆண்டு களாக அங்கீகாரம் பெற்றிருந்த பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மத்திய அரசாங்கத்தின் தனி யார் ஆதரவு, பிஎஸ்என்எல் விரோத கொள்கை களை எதிர்த்து நடத்திய வீரஞ்செறிந்த போரா ட்டங்களின் காரணமாகவே ஊழியர்கள் இந்த மகத்தான வெற்றியை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் குமரி முதல் இமயம் வரை உள்ள அனைத்து மாநிலங்களி லும் ரகசிய வாக்கெடுப்பு முறையில்  சங்க அங்கீ காரத் தேர்தல் நடைபெறுகிறது. 2004ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற ஏழு தேர்தல் களிலும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக முதன்மைச் சங்கமாகவே வெற்றி பெறுவது என்பது, ஊழியர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இந்த சங்கம் செயல்படுகிறது என்பதன் அடையாள முத்திரை யாகும். இந்த தேர்தலில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றியை தடுப்பதற்காகவும், சங்கம் எந்தவித போராட்ட மும் நடத்தக்கூடாது என்றும், சங்க அங்கீகார தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக்கி விடுவோம் என்றும் பிஎஸ்என்எல் நிர்வாகம் மிரட்டிய போதிலும் கூட, தொடர்ந்து போராட்டம் நடத்தி இந்த மகத்தான வெற்றியை சங்கம் பெற்றுள்ளது.

பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறு வனம், இந்திய மக்களின் சொத்தாகும். இதனை தனியாருக்கு தாரை வார்க்க அனுமதிக்கமாட்டோம் என்ற உறுதியோடு அனைத்து ஊழியர்களையும் அதிகாரிகளையும் ஒன்று திரட்டி மக்கள் ஆதரவோடு பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடும் என்கின்ற உத்தரவாதத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் அளிக்கிறது என மாநிலத் தலை வர் எஸ்.செல்லப்பா, மாநில செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன் கூறியுள்ளனர்.

BSNL Employees Union Nagercoil