தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் முன்னாள் மாநி லத் தலைவர் மோசஸ் கரூரில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட் டத்தில் கூறியதாவது: மத்திய அரசால் அறிமுகப்படுத் தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை  கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது கல்வித் துறையை 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் நடைமுறையைக் கொண்டுள்ளது. மாணவர்கள் பலர் கல்வி நிலை யங்களை விட்டு வெளியேறும் அபா யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கல்விக் கொள்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்.  மேலும் 5 மற்றும் 8ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது, தனியார் மயமாக்குவதை ஊக்கு விக்கிறது. இந்த தேர்வு முறை இனி ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். ஆனால் எதிர்வரும் மூன்று ஆண்டு களுக்கு மட்டும் மாணவர்களின் தோல்வி(பெயில்)இருக்காது. அதன் பின்னர் இந்த தேர்வு கடுமை யாக தமிழக அரசால் கடைப் பிடிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். இந்த தேர்வை நடத்த வேண்டும் என்ற ஆணையை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. பள்ளிகளில் தொண்டு நிறு வனங்கள் பாடம் நடத்தலாம் என் பதை அமல்படுத்திட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு இது வரை இந்த புதிய கல்விக் கொள்கை யை அமல்படுத்துவது குறித்து எந்த உத்தரவும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்தப் புதிய கல்விக் கொள்கை ஏற்கப்பட வில்லை.  ஆனால் தமிழக அரசு அனை வரையும் முந்தி கொண்டு மத்திய பாஜக அரசு அறிவிக்கும் திட்டங் களை செயல்படுத்தும், மத்திய அர சின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது. இதனை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலக் குழு வன்மையாக கண் டிக்கிறது. தமிழகத்தில் 1990இல் வெறும் 3000 மெட்ரிக் பள்ளிகள் மட்டும் இருந்தது. ஆனால் தற்போது 18 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. அரசு ஓராசிரியர் பள்ளிகளை  மூடி விட்டது. அடுத்து தமிழகத்தில்  உள்ள 18 ஆயிரம் ஈராசிரியர் பள்ளி களையும் மூடிவிட திட்டமிட்டுள்ளது.  கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 900 ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அந்த அளவிற்கு ஆசிரி யர் நியமனம் மீண்டும் கல்வித்துறை யில் நடக்கவில்லை. ஒருபுறம் ஆசிரி யர் குறைப்பு; மற்றொருபுறம் அரசு பள்ளிகளை குறைப்பது என்ற நிலை தொடர்கிறது. இப்படிப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை மக்க ளுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் வரும் செப்.25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். பிரச்சாரம் வரும் 29ஆம் தேதி கரூரில் நிறைவு பெற வுள்ளது. அன்று தமிழக அளவில் லட்சக்கணக்கான ஆசிரியர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடை பெறுகிறது என்று கூறினார்.  இதில் மாநில துணைத்தலை வர் ரஹீம், மாநில பொதுச் செயலா ளர் கணேசன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட தலைவர் காளி தாஸ் உள்ளிட்ட  பலர் கலந்து கொண் டனர்.

BSNL Employees Union Nagercoil