இந்தியாவில் தேஜாஸ் ரயிலைத் தொடர்ந்து, சாதாரண பயணிகளுக்கான வழித்தடத்திலும் 150 தனியார் ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு முடிவெடுத்த மோடி அரசு, முதன்முதலாக தில்லி – லக்னோ இடையிலான ‘தேஜாஸ்’ ரயிலை தனியாருக்கு கொடுத்தது. இந்த ரயிலை நிர்வகிப்பது, பயணக் கட்டணத்தை நிர்ணயித்து, அதனை விற்பனை செய்வது ஆகியவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்தது. இதன் அடுத்தகட்டமாக, தனியாரே சொந்தமாக ரயில்களை இயக்கிக் கொள்ளலாம் என்ற கட்டத்திற்கு தற்போது வந்துள்ளது. இந்தியாவில் 150 தனியார் ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார். இந்தமுறை தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சொந்த ரயிலையே இறக்குமதி செய்து இயக்கலாம் அல்லது இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துஇயக்கலாம் என்று கூறியுள்ளார்.நாட்டில், தற்போது 8 ரயில்வே தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், ரயில் இன்ஜின்கள் தயாரிப்புக்காக ஒன்று, ரயில்பெட்டி உற்பத்திக்காக ஒன்று என அவற்றை வெறும் இரண்டாகக் குறைக்கப் போவதாகவும் கிட்டத்தட்ட ரயில்வே துறையையே முழுமையாக தனியார்மயமாக்கும் திட்டமாக வினோத் குமார்யாதவ் இதனை அறிவித்துள்ளார்.

BSNL Employees Union Nagercoil