தமிழக BSNLல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரவேண்டிய 9 மாத காலமாக ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நிர்வாகம் முன்மொழிந்துள்ள 50% ஆட்குறைப்பை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி 26.09.2019 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. இந்த வேலை நிறுத்தம் தமிழகத்தில் மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பிரமாண்டமாக பங்கேற்று வெற்றி பெறச் செய்துள்ளனர். அனைத்து கிளைகளிலும், மூன்று நாட்களிலும், BSNL ஊழியர் சங்கம் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும், இந்த மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்திட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. நமது கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை நமது போராட்டங்கள் ஓயாது. ஓயாது போராடி வெற்றி பெறுவோம், தோழர்களே.

BSNL Employees Union Nagercoil