டிஜிட்டல் பரிவர்த்தனையின் லட்சணம்

சென்னை பெரம்பூர் லோகோ ரயில்வே பணிமனையில் சமையலராக பணிபுரியும் சிவக்குமார் ஒரு ஒப்பந்த தொழிலாளி ஆவார். இவர் தனது  செப்டம்பர் மாதச் சம்பளத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரணம் இவருக்கு ரயில்வே ரூ.15 ஆயிரம் சம்பளமாக தரு கிறது. ஆனால் அவருக்கு பணியை தரும் ஒப்பந்தக்காரர் ரூ.5 ஆயிரத்தை பிடித்துக் கொண்டு  ரூ.10 ஆயிரம் மட்டுமே தருகிறார். அந்த சம்பளமும் ரொக்கமாக ஒப்பந்தக் காரரால் தரப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்வேயில் ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு சம்பளத்தை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். ஆனால் ஒப்பந்தக்காரர்கள் அவ்வாறு செலுத்துவதில்லை.   சிவக்குமார் மட்டுமல்ல பல ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை இதுதான். இந்த பணிமனையில் 53 ஒப்பந்தத் தொழிலாளர் கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள னர். அவர்களுக்கு வேலை தரும் ஒப்பந்த தாரர்கள் ரயில்வே நிர்ணயித்த சம்பள த்தை தராமல் ஏமாற்றி வருகிறார்கள். தெற்கு ரயில்வேயில் சென்னை மண்டல த்திற்கு உட்பட்ட  பொறியியல், பராமரிப்பு ஆகிய துறைகளிலும் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஐசிஎப் ஆலையிலும் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில்  பெரும்பாலோருக்கு ரொக்கமாகத் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களில் வெகுசிலருக்கு மட்டுமே  ஊழியர் வருங்கால வைப்புநிதி (பிஎஃப்) மற்றும் இஎஸ்ஐ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தெற்கு ரயில்வேயில் 1944 ஒப்பந்த தாரர்களின் கீழ் 4 ஆயிரத்து 830 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கிறார்கள். சென்னை மண்டலத்தில் மட்டும் 1630 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ள னர். ஒவ்வொரு தொழிலாளியும் குறைந்த பட்ச சம்பளத்தின்படி நாள் ஒன்றுக்கு ரூ.580 சம்பளமாக பெறவேண்டும். இவர்களுக்கு ரூ.9 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பள மாக வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையி லேயே தொழிலாளர்களுக்கு கிடைத்ததோ ரூ.5 கோடிதான். ஒப்பந்தக்காரர்கள் பையில் நிரம்பியதோ ரூ.4.50 கோடி. இந்த  கணக்குப்படி ஒவ்வொரு ஒப்பந்தத் தொழி லாளியும் ரூ.300-தான் சம்பளமாக பெற்றுள்ளனர்.  ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தராத ஒரு ஒப்பந்த தாரரை பணியில் இருந்து ரயில்வே நிர்வா கம் அண்மையில் நீக்கியது. ஆனால் புதிதாக அந்த பணிகளை ஒப்பந்தம் எடுத்து ள்ள ஒப்பந்ததாரரும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தருவதில்லை. மேலும் வங்கிக்கணக்கில் செலுத்து வதற்கு பதில் ரொக்கமாகவே அவர் தரு கிறார். வங்கிக்கணக்கில் செலுத்தினால் எவ்வளவு சம்பளம் தரப்படுகிறது என்பது தெரிந்துவிடும். ரொக்கமாக தரும் போது ரயில்வே ஒதுக்கிய சம்பளத் தொகையைதான் தந்ததாக அவர்கள் கணக்கில் எழுதிக்கொள்வார்கள். ஆனால் ரொக்கமாக தரும்போது குறைத்து தருவார்கள். கடந்த ஓராண்டுக்கு முன்பு ரயில்வே யில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணி யில் சேர்ந்த குமார் என்ற ஒப்பந்த தொழி லாளி இதுகுறித்து கூறுகையில், ஒப்பந்த தாரர்கள் ரொக்கமாகத்தான் பணத்தை தருகிறார்கள்.  எனக்கு ரயில்வே ஒப்பந்தப் படி நாளொன்றுக்கு ரூ.583 சம்பளமாக தர வேண்டும். ஆனால் ரூ.300-தான் தரப்படுகிறது.வங்கிக்கணக்கில் ஏன் பணத்தை செலுத்த மறுக்கிறீர்கள் என்று  எங்களால் கேட்க முடியும்.ஆனால் எங்க ளுக்கு தொடர்ந்து வேலை கிடைக்காது என்றார். யாராவது ஒருவர் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிறார் அவர்.

பெரம்பூர் லோகோ ரயில்வே பணி மனையின் தலைமை மேலாளர் அருண் தேவராஜிடம் இதுகுறித்து கேட்டபோது, ஒப்பந்ததாரர்கள் குறித்து புகார் பெற்ற வுடன் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் தான் சம்பளத்தை செலுத்த வேண்டும். இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறிக்கொண்டார். ஒப்பந்ததாரர்களை கேட்டால், ரயில்வே பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் போது குறைந்த புள்ளிகளை நாங்கள் தெரிவிக்கிறோம். லாபம் அடைய வேண் டும் என்பதற்காக குறைந்த சம்பளத்தில் வேலையை முடித்துத்தருவதாக ஒப்பந்த  புள்ளியில் தெரிவிக்கிறோம். அதன் அடிப் படையில்தான் எங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கிறது. நாங்கள் தொழிலாளர் களுக்கு ரொக்கமாகத்தான் பணத்தை தரமுடியும். ரயில்வே விதித்துள்ள சம்பளத்தில் குறைத்து தந்தால்தான் எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார். விதிகளை பின்பற்றினால் லாபம் வர்த்த கம் பண்ண முடியுமா? என்றும் அவர் பகிரங்கமாக கேட்கிறார். இது குறித்து பல ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியும். அவர்கள் மவுனமாக இருக்க என்ன கார ணம் என்றால், வேலை நடக்க வேண்டுமே  என்பதால் தான் என்றும் அவர் கூறு கிறார்.  ரயில்வேயில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களில் 18 சதவீதம் பேர்  மட்டுமே தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளத்தை செலுத்துவது 2018 ஆம் ஆண்டிற்கான  தலைமை கணக்காயர் (சிஏஜி)  தணிக்கையில் தெரியவந்தது. மீதமுள்ள  82 சதவீதம் பேர்  ரொக்கமாகத்தான் தருகிறார்கள்.ரயில்வேயில் உள்ள 9 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில் இது தெரியவந்துள்ளது.

1970ஆம் ஆண்டு ஒப்பந்த தொழி லாளர் முறை முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் சட்டத்தின் (சிஎல்ஆர்ஏ) கீழ்  ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அவர் களது சம்பளத்தை வங்கிக் கணக்கில் தான் செலுத்தவேண்டும். இதை வேலை யளிக்கும் ரயில்வேதான் உறுதிப்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள் அவ்வாறு சம்பளத்தை முறையாக தராமல் ஒரு பகுதியை அபகரித்துக்கொண்டால் அதை  ரயில்வே நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது என்று தொழிற் சங்கத் தலைவர்கள் கூறுகிறார்கள். இந்த மோசடி குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொதுமேலாளர் ஜான் தாமசிடம் கேட்டபோது, ஒப்பந்தப்புள்ளி கோரும்போதே தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டும். அதை எப்படி தரவேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதை ஏற்றுக்கொண்டவர் களுக்கே ஒப்பந்தங்கள் தரப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு வங்கியில் சம்பளம் செலுத்தியதற்கான வங்கி அளிக்கும் சான்று, பிஎஃப் மற்றும் இஎஸ்ஐக்கு அளிக்கவேண்டிய தொகை ஆகியவற்றை செலுத்தியதற்கான ஆதாரத்தை  ஒப்பந்த தாரர்கள் தரவில்லையென்றால் அவர் களின் பில்தொகைக்கு பணம் தரமாட்டோம் என்கிறார்.  ஒப்பந்தக்காரர்கள் ஒவ்வொரு தொழிலாளியின் பெயரிலும் வங்கிக் கணக்கு ஆரம்பித்து அதற்காக டெபிட் கார்டுகளையும் பெற்றுக்கொண்டு அதை தங்களிடமே வைத்துக்கொள்கிறார்கள். அந்த பாஸ்புத்தகம் மற்றும் டெபிட் கார்டு களை தொழிலாளர்களிடம் தருவதில்லை. மேலும் தொழிலாளர்களும் தங்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்று அறியாமல் இருக்கிறார்கள் என்றபோது, இதுகுறித்து விசாரிப்பதாகக் கூறிய அந்த அதிகாரி, சம்பளம் முறையாக தரப்படு கிறதா என்பதை விசாரிக்க ரயில்வேயில் தனி ஏற்பாடு உண்டு. அதில் உள்ள குளறுபடிகளை ஆய்வு செய்ய உள்ளதாக வும்,  கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து ரயில்வே ஒப்பந்தப் பணிகளுக்கான சம்பளமும் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றும் கூறினார்.

தொழிலாளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக உரு வாக்கப்பட்டது ஷர்மிக் கல்யான் வலைத் தளம். ஆனால் இதையும் ரயில்வே அதிகாரி களும் ஒப்பந்ததாரர்களும் ஏமாற்றி விட்டனர். இந்த வலைதளம் ஒப்பந்த தொழி லாளர்கள் குறித்த விவரம், அவர்களுக் கான சம்பளம், ஒப்பந்ததாரர் குறித்த விவரம் ஆகியவற்றுக்காக உருவாக்கப் பட்டது. தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தியதற்கான தகவல்களை இதில் பார்த்துக்கொள்ள லாம். ஆனால் ஒப்பந்தக்காரர்கள் வங்கியில் பணத்தை செலுத்தினாலும் தங்களிடம் உள்ள டெபிட் கார்டுகளை வைத்து தங்களுக்கு தேவையான தொகையை எடுத்துக்கொண்டு மீதமுள்ள சம்பளத்தை தொழிலாளிகளுக்கு தரு கிறார்கள். சட்டப்படி பார்த்தால் அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தியது உறுதிப் படுத்தப்படுகிறது. ஆனால் டெபிட் கார்டு ஒப்பந்ததாரர் அல்லவா வைத்திருக்கிறார். இவை அனைத்தும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரியும். மத்திய பாஜக அரசின் டிஜிட்டல் பணப்பரிமாற்றத் திட்டத் தால் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே  பணம் செல்வதாகவும் இதனால் இடைத் தரகர், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர் களும் ஊர் ஊராக சொல்லிக்கொண்டிருக் கின்றனர். இது எவ்வளவு பொய்யானது என்பற்கு உதாரணம்தான் தெற்கு ரயி ல்வே ஒப்பந்த தொழிலாளர் விவகாரம். 

ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா
 

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைப்பது என்ன?

சென்னை கோட்டத்தில் சராசரி சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.580 தரவேண்டும். ஆனால் தொழிலாளர்கள் வாங்குவதோ ரூ.300 தான். இந்த கணக்கை தொழிலாளர்களும் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அப்படியென்றால் ஒப்பந்ததாரர்கள் பைக்கு நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளி என்ற கணக்கில் ரூ.280 செல்கிறது. இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு 1.64 லட்சம் மனிதநாட்கள் உழைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான தொகையில் ரூ.4.5 கோடி ஒப்பந்ததாரர்களால் அபகரிக்கப்படுகிறது.

ரயில்வே விதிகள்  சொல்வது என்ன?
சம்பளத்தை ஒப்பந்த தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில்தான் செலுத்தவேண்டும். அவர்களுக்கு ஓய்வறை, கழிவறை, குடிநீர், முதலுதவி செய்து தந்திருக்கவேண்டும். இவர்களின் வருகைப்பதிவேடு, சம்பளம் ஆகியவற்றை முதன்மை வேலையளிப்பவரும் (ரயில்வே) ஒப்பந்தம் எடுத்தவரும் பராமரிக்க வேண்டும். தொழிலாளர் நல தலைமை ஆணையர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரரும் ரயில்வேயும்  பதிவு செய்திருக்கவேண்டும். குறித்த காலத்திற்குள் சம்பளத்தை வழங்கவேண்டும்.

BSNL Employees Union Nagercoil