லாபத்தில் இயங்கும், பொதுத்துறையை சேர்ந்த ஐஆர்சிடிசி (IRCTC) – நிறுவனம், முதல் நிலை பங்கு வெளியீடு அடிப்படையில், (Initial Public Offering) தனது 12.6 சதவிகித பங்குகளை, இந்திய பங்குச் சந்தைகளில் விற்பனை செய்துள்ளது.இந்திய ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.இந்திய ரயில்வே-யின் துணை நிறுவனமான, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம், (Indian Railway Catering and Tourism Corporation- IRCTC) ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக பரிவர்த்தனைகள் செய்யும் நிறுவனமாக உள்ளது. மாதம்தோறும் சுமார் 2.5 கோடி பரிவர்த்தனை கள் ஐஆர்சிடிசி-யால் மேற்கொள்ளப்படுகின்றன. 
அதுமட்டுமல்ல, ஐஆர்சிடிசி தொடர்ந்து லாபத்தில் இயங்கக் கூடியஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமும் ஆகும்.2018 நிதியாண்டில் 220 கோடியே 60 லட்சம் ரூபாயும் 2019 நிதியாண்டில் 272 கோடியே 60 லட்சம் ரூபாயும் லாபம்ஈட்டியுள்ளது. 2018-இல் ஆயிரத்து 470 கோடியே 46 லட்சம் ரூபாயாக இருந்தஐஆர்சிடிசி-யின் வருவாய், 2019-இல்ஆயிரத்து 867 கோடியே 88 லட்சம் ரூபாய்அளவிற்கு இருமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில்தான், லாபமீட்டும் ஐஆர்சிடிசி நிறுவனத்தில், தனக்கு இருக்கும் 100 சதவிகித பங்குகளில், 12.6 சதவிகித பங்குகளை, ஒரு பங்கு ரூ. 315 முதல் ரூ. 320 என்ற விலையில், மொத்தம் 2 கோடி பங்குகளாக பிரித்து,முதல்நிலை பொதுப் பங்குவெளியீடு அடிப்படையில், தனியாருக்கு விற்பனைசெய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்து,கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி பங்குகளை வெளியிட்டது.இந்த 2 கோடி பங்குகளில் 1 லட்சத்து60 ஆயிரம் பங்குகள் ரயில்வே பணியாளர்களுக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறிய ரயில்வே, ஐஆர்சிடிசியின் பங்குகளை வாங்கும் சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் சம்பளப் பணியாளர் களுக்கு பங்கின் விலையில் 10 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என்றும் கூறியது.

பங்குகள் வாங்கும் வாய்ப்பு அக்டோபர் 3ஆம் தேதியுடன் முடிவடையும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. ஆனால், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனம் என்பதால், அக்டோபர் 1-ஆம் தேதியே 81 சதவிகித பங்குகளை முதலீட்டாளர்கள் அள்ளி விட்டனர். 1 கோடியே 63 ஆயிரம்பங்குகள் விற்பனையாகி விட்டன.இதன் அடுத்தகட்டமாக, அக்டோபர் 9ஆம் தேதி பங்குகள் ஒதுக்கப்படலாம் என்றும், அக்டோபர் 14-ஆம் தேதிமுதல் ஐஆர்சிடிசி பங்குகள் மும்பை பங்குச் சந்தை (BSE SENSEX) மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE NIFTY)பட்டியலிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒரு பங்கு 315 ரூபாய்க்கு விற்கப் பட்டால் 635 கோடியே 40 லட்சம் ரூபாய்நிதி திரட்ட முடியும் எனவும் 320 ரூபாய்க்குவிற்றால் 645 கோடியே 12 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுள்ள ரயில்வே, இதை வைத்தே ரயில்வே விரிவாக்கத் திட்டங்களை மேற்ள்ளப்போவதாக கூறியுள்ளது.ஏற்கெனவே, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல் – RVNL), ரயில்இந்தியா டெக்னிக்கல் மற்றும் எகனாமிக்சர்வீஸ் (ஆர்ஐடிஇஎஸ் – RITES) மற்றும்ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் (ஐஆர்சிஓஎன் – IRCON) ஆகியவற்றின் பங்குகளையும் பங்குச் சந்தையில் ரயில்வே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BSNL Employees Union Nagercoil