ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுக்கலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோச லிஸ்டு கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 106 தொகுதிகள் அக்கட்சிக்கு கிடைத்துள்ளன. தற்போதைய பிரத மரான அன்டோனியோ கோஸ்டா தலைமை யிலான அரசு மீண்டும் தொடரவிருக்கிறது.  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோஸ்டா பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. ஆட்சி நிலைக் காது, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப் படுத்த முடியாது, யூரோ மண்டலத்தில் இயங்கு வது சிரமம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை சமூக ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன. அனைத்து எதிர்க்கருத்துக்களையும் முறியடிக்கும் வகை யில் தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து, மீண்டும் ஆட்சியதிகாரத்தை அவரது சோசலிஸ்டு கட்சியும், போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்குழு ஆகியவையும் கூட்டாகக் கைப்பற்றியுள்ளன. முழுப் பெரும்பான்மையை சோசலிஸ்டு கட்சி பெறாவிட்டாலும், கடந்த நான்கு ஆண்டுக்கா லத்தில் ஆட்சிக்கு ஆதரவு தந்த இடதுசாரிகள் மீண்டும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களது ஆதரவை மீண்டும் பெறப்போவதாக கோஸ்டா அறிவித்துள்ளார். சோசலிஸ்டு கட்சியின் பாதையில் வேண்டாத திருப்பம் எதுவும் ஏற்படாமல் தடுப்பதில் கவன மாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசா ரிக்குழுவும் மீண்டும் அதில் முனைப்பாக இருக்க முடிவு செய்துள்ளன.

இந்த இரண்டு கட்சிகளும் 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டில் பதவியேற்றவுடன், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட சம்பள வெட்டு மற்றும் ஓய்வூதி யக்குறைப்பை அரசு திரும்பப் பெற்றது. பொதுத் துறை சொத்துக்களைச் சூறையாடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. வேலைவாய்ப்பை உருவாக்கு வதில் கவனம் செலுத்தியது. ஆட்சிப் பொறுப் பேற்றபோது வேலையின்மை 12 சதவிகிதமாக இருந்தது. நான்காண்டுகளில் 6.3 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சியானது 2017ல் 3.5 சதவிகிதமாகவும், 2018ல் 2.4 சதவிகிதமா கவும் உள்ளது. 2000 ஆம் ஆண்டிற்குப்பிறகு தற்போது தான் இவ்வளவு வளர்ச்சி காணப்பட்டிருக்கிறது.  நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் பற்றாக்குறை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.2 சதவிகிதமாக இருந்தது. சர்வாதிகார ஆட்சி யிலிருந்து விடுபட்டு ஜனநாயகத்திற்குத் திரும்பிய பிறகு, அதாவது 1974 ஆம் ஆண்டுக் குப்பிறகு, முதன்முறையாக இவ்வளவு குறை வான அளவில் பற்றாக்குறை இருந்திருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் உபரி பட்ஜெட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர்ச்சுக் கலின் வரலாற்றில் உபரி பட்ஜெட் என்பது முதன் முறையாக இருக்கப் போகிறது.  போர்ச்சுக்கலின் வெற்றி ஐரோப்பியக் கண்டத் தில் உற்சாகத்தை தந்துள்ளது. வலதுசாரிகளின் நூற்றாண்டு என்று பேசிக்கொண்டிருந்தவர்க ளுக்கு போர்ச்சுகல் மக்கள் அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறார்கள். இடதுசாரிக் கொள்கைகள்தான் அனைத்து மக்களுக்கும் நலன் பயக்கும் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சியாக போர்ச்சுகல் நம்முன் கம்பீரமாக நிற்கிறது.