TRAI விதிகளை மதிக்காமல் , அரசு ஆதரவோடு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் நஷ்டம் அடையச்செய்துவிட்டு , ஜியோ நிறுவனம் தற்போது முதல் முறையாக வாய்ஸ் கால்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்ற அளவில கட்டணம் வசூலிக்க உள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ஜியோ, கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் வாடிக்கையாளர்கள் பயன்பாட் டுக்கு வந்தது. அச்சமயத்தில் ஏர் டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தொலை தொடர்பு மற் றும் இணைய சேவையில் முன் னணியில் இருந்து வந்தன.

இந்த மூன்றாண்டு காலகட்டத்தில் இந் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு சந்தையில் முதல் இடம் பிடித்துள்ளது. ஜூன் மாதம் முடிந்த முதல் காலாண்டில் ஜியோ நிறுவனம் 33.1 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது முதல் முறையாக வாய்ஸ் கால்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்ற அளவில கட்டணம் வசூலிக்க உள்ளது. மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு இதுவரை ஜியோ நிறுவனம் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. TRAI வழிகாட்டுதலின்படி இந்த கட்டணம் நிறுவனங்கள் இடையே வசூலிக்கப்படுகிறது.

அதன்படி வாய்ஸ் கால்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்ற அளவில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மக்கள் சேவையில் BSNL!!

BSNL Employees Union Nagercoil