நாகர்கோவில் AUAB ன் கூட்டம் தலைவர் M.லட்சுமணபெருமாள் அவர்கள் தலைமையில்  15-10-2019 அன்று 12.00 மணிக்கு BSNLEU அலுவலகத்தில் கூடியது. கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர்கள் K.ஜார்ஜ், P.ராஜூ, R.சுயம்புலிங்கம், P.சின்னத்துரை  NFTE-BSNL சார்பாக தோழர் M.லட்சுமணபெருமாள்  SNEA  சார்பாக தோழர் M.றோஸ் சிறில் சேவியர் தோழர் P.ஆறுமுகம்  AIBSNLEA சார்பாக தோழர் S.செல்வராஜன் SEWA-BSNL சார்பாக தோழர்கள் T.விஜயன், S.டைட்டஸ் சாம், P.பேச்சிநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். FNTO சார்பாக அதன் மாவட்டச் செயலாளர் தோழர் அச்சுதானந்த் இன்றைய கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால்  கலந்து கொள்ள முடியவில்லை  என்பதை தெரியப்படுத்தினார்.

 இன்றைய கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

  • AUAB மத்திய அமைப்பு அழைப்பு விடுத்துள்ள ஒருநாள் உண்ணாவிரதம்  18-10-2019 அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நாகர்கோவில் GM அலுவலகத்தில் சிறப்பாக நடத்துவது. என்றும் உண்ணாவிரதத்தில் குறைந்தபட்சம் 100 தோழர்கள் இருக்க வேண்டும். என்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான கோட்டாவாக BSNLEU-40 NFTE-15, SNEA-25, AIBSNLEA-10, SEWA-10, TNTCWU-10 மற்றும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் இதர சங்கங்கள்.
  • 18-10-2019 அன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து ஊழியர்களை கலந்து கொள்ளசெய்ய  வேண்டும்.
  • உண்ணாவிரதப் போரட்டத்தை விளம்பரப் படுத்த Flex Board மூன்று பகுதிகளில் வைப்பது எனவும், ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை அட்டைபிடிப்பது. என முடிவு செய்யப்பட்டது.

தோழமையுடன்

M.லட்சுமணபெருமாள்  [தலைவர்AUAB]                                                  பா.ராஜூ [அமைப்பாளர் AUAB]

த                                          

BSNL Employees Union Nagercoil