உலகின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவ னங்களில் ஒன்றான இந்திய ரயில்வேத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியை மோடி அரசு துவக்கியுள்ளது. முதல் கட்டமான 150 பயணி கள் ரயிலை இயக்கும் பொறுப்பையும், நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இதை நடை முறைப்படுத்த குழு ஒன்றை யும் மோடி அரசு அமைத்துள்ளது. இதன் முதல் கட்டமாக லக்னோ, தில்லி இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் பொறுப்பு தனியாருக்கு தரப்பட்டு, மிகுந்த ஆரவா ரத்துடனும், விளம்பரத்துடனும் அந்த ரயில் இயக்கப்பட்டது. ஆனால் இந்த ரயிலில் ரயில்வேத் துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட இந்திய ரயில் கட்டணத்தை மீறி கூடுதலாக கட்டணம் வசூ லிக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது.

இந்த ரயிலுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் பெற முடியும் என்றும், ரயில்வே விதிக ளுக்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டப்படு கிறது. தனியார் ரயிலில் ஏசி, உயர்தர வகுப்புக்கு ரூ.2450ம், ஏசி வகுப்புக்கு ரூ.1565ம் வசூலிக்கப்படு கிறது. ஆனால் இதே தடத்தில் செல்லும் இந்திய ரயில்வே இயக்கும் ரயிலில் ஏசி உயர்தர வகுப்புக்கு ரூ.1855ம், ஏசி வகுப்புக்கு ரூ.1165 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதே தளத்தில் இயங் கும் காரிப் ரத எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி முதல்தர வகுப்புக்கு ரூ.645ம், ஏசி வகுப்புக்கு ரூ.489 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 

கட்டணத்தை ரயில்வேத் துறை மட்டுமே நிர்ணயிக்க முடியும் என ரயில்வே உயரதிகாரிகள் கூறும் நிலையில் தனியார் முதலாளிகள் தங்கள் வேலையை காட்டத்துவங்கி விட்டனர். ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படுவது போன்று விழாக் காலங்களில் இன்னும் கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

தொலைத் தொடர்புத் துறையில் நடந்தது போல பொதுத்துறையில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கட்டமைப்பை அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலைகள் விழுங்கிக் கொள் ளையடிக்கவே ரயில்வே துறையை மோடி அரசு தனியார்மயமாக்கி வருகிறது.

இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த போதே ரயில்வேத்துறையை தனியார்மயமாக்கு வதற்கான அபாய சங்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊதி விட்டார். ரயில்வே துறையில் முதலீடு செய்வதற்கான சக்தி அரசுக்கு இல்லை என்பதால் கார்ப்பரேட்டுகளின் உதவி நாடப் படுகிறது என்று அவர் தனியார்மயத்தை நியாயப் படுத்தினார்.

பயணிகள் ரயில் மற்றும் ரயில் நிலையங்க ளை மட்டுமின்றி, ரயில்பெட்டி, எஞ்சின் மற்றும்  சக்கரங்கள் தயாரிக்கும் உற்பத்தி தொழிற்சாலை களையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மொத்த சுமையும் பயணிகள் தலையிலேயே விழும். இது அப்பட்டமான அயோக்கியத்தனம். சேவைத் துறையான ரயில்வேயை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடி அரசு சீரழிக்கத் துவங்கிவிட்டது. இதன் முதல் அடிதான் தனியார் ரயிலில் நடக்கும் கட்டணக் கொள்ளை.

BSNL Employees Union Nagercoil