BSNLன் அன்றாட செலவுகளை ஈடுகட்ட ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ரூ.2,000/-மும், அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து ரூ.3,000/-மும் பிடித்தம் செய்து கொள்ள, நேற்று(16/10/19) CMD BSNL மற்றும் DoT செயலாளர் ஆகியோரோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் AUAB ஏற்றுக் கொண்டதாக, முற்றிலும் தவறான, விஷமத்தான ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அதுமாதிரியான கூட்டம் எதுவும் நடைபெறவும் இல்லை. அதுபோன்ற முடிவுகள் எதுவும் எடுக்கப்படவும் இல்லை. தொழிற்சங்க இயக்கத்தை பலவீனப்படுத்தும் லட்சியத்தோடு இருக்கும் சில விஷமிகளால் செய்யப்படும் கைங்கர்யம் தான் இந்த செய்தி. இத்தகைய செய்திகளை நம்பவும் வேண்டாம். மற்றவர்களுக்கு பகிரவும் வேண்டாம் என AUABயின் அமைப்பாளர் தோழர் P.அபிமன்யு தெரிவித்துள்ளார்

BSNL Employees Union Nagercoil