இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரியது; அதனைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தவாறே கையாண்டுவிட முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்ரகுராம் ராஜன் விமர்சித்துள்ளார்.பொருளாதார நலன்களுக்கு எதிரான பொது அதிகாரக் குவிப்பு உடைக்கப்பட்டாக வேண்டும் என் றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரகுராம் ராஜன் மேலும் கூறியிருப்பதாவது:“மோடி அரசிடம் அரசியல் தொலைநோக்கு இருப்பதைப் போல, பொருளாதாரத் தொலைநோக்கு இல்லை. இந்தியப் பொருளாதாரத்தை, பிரதமர் அலுவலகத்திலிருந்து கையாள முடியாது. ஏனெனில், இந்தியப் பொருளாதாரம் மிகவும் பெரியது. இன்றைய நிலையில் மத்தியஅமைச்சர்களுக்கு அதிகாரமில்லை. அவர்கள் முடிவெடுக்கும் இடத்திலும் இல்லை. மத்திய அரசில்பொது அதிகாரக் குவிப்பு நிலவுகிறது. தலைமையிடமே அனைத்துஅதிகாரமும் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைமையிடம் நிலைத்தன்மையும் தெளிவான தொலைநோக்கும் இல்லை. எனவே, பொருளாதார வளர்ச்சியை நோக்கி தற் பாதைய தலைமையால் நாட்டைச் செலுத்த முடியாது.பிரதமர் அலுவலகம் என்பதுஅதிகாரிகளை வைத்து செயல்படக்கூடியது. ஐஏஎஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் சொந்தமாக முடிவுகள் எடுக்கத் தயங்குவார்கள். அவர்களிடம் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வலுவான யோசனைகள் கிடையாது. எனவே, பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட்டாக வேண்டும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

BSNL Employees Union Nagercoil